சபாஷ்.. இயற்கை உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க "பிரணாம்" திட்டம்.. அறிவித்த நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் செயற்கை உரங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் இதற்கு மாற்றாக இயற்கை உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
டெல்லி: ரசாயன உரங்கள் மீதான மானியங்களை குறைக்கும் நோக்கில், PM PRANAM எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் இயற்கை உரங்களை அதிகரிப்பதே இலக்காகும்.
நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில், அவரைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்பித்தார். இதனையடுத்து இன்று நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார். இதில், வேளாண் துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் தற்போது PM PRANAM எனும் புதிய திட்டம் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் கர்நாடகா என 9 மாவட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில், மோடி தலைமையிலான 2.0 அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. குறிப்பாக வேளாண் துறையில் அதிக அளவில் சலுகைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே இந்த முறை வேளாண் துறைக்கு அதிக அளவில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இயற்கை உரங்களின் பயன்பாடுகளை அதிகரிக்க PM PRANAM திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நிதி தனியாக ஒதுக்கப்படாது. அதாவது உரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து இதற்கு நிதி வழங்கப்படும். இந்த நிதியை கொண்டு 70% மாற்று உரங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். இந்த நிதியில் 30% நேரடியாக பஞ்சாயத்துகள், வேளாண் உரங்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு வழங்கப்படும்.

இப்படியாக ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தின் யூரியாவின் பயன்பாட்டை கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிட்டு அளவிடப்படும். இந்தியாவை பொறுத்த அளவில் ஒவ்வொரு காலத்திற்கும் உரத்தின் பயன்பாடு மாறுபடும். உதராணமாக ஜூன்-ஆகஸ்ட் காலங்களில் அதிகமாகவும், மார்ச்-ஏப்ரல் காலத்தில் குறைவாகவும் இருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications