2024 தேர்தலில் திமுகவின் மெகா கூட்டணியில் மநீம, பாமக, தேமுதிக? கார்த்தி சிதம்பரம் ஆரூடம் பலிக்குதோ?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், பாமக மற்றும் தேமுதிக ஆகியவை இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்து கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் லீக், விசிக, மதிமுக, மமக மற்றும் சிறிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி மெகா வெற்றியை பெற்றது போல 2024 லோக்சபா தேர்தலிலும் அமோக வெற்றியை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டுகின்றன.

கார்த்தி சிதம்பரம் ஆரூடம்

கார்த்தி சிதம்பரம் ஆரூடம்

இந்த நிலையில் திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இடம் பெறும்; குறிப்பாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், பாட்டாளி மக்கள் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக ஆகியவையும் திமுக கூட்டணிக்கு வரும் என அண்மையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த கணிப்பு மெய்யாகும் வகையில் அரசியல் அரங்கில் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

பாமக நிலை

பாமக நிலை

பாமகவைப் பொறுத்தவரையில் அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ள கட்சிதான். ஆனால் தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் இணக்கமாகவே இருந்து வருகிறது. சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் திமுகவின் நட்பு சக்தியாகவே இருக்கிறது பாமக. திமுக அரசுக்கு எதிராக காட்டமான விமர்சனங்களை லாவகமாகவும் தவிர்த்து வருகிறது. அண்மையில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழாவை அதிமுக, பாஜக புறக்கணித்தன. ஆனால் பாமகவின் முன்னாள் தலைவர் ஜிகே மணி பங்கேற்றார். பாமகவை பொறுத்தவரை சட்டசபை தேர்தலில் கவுரவமான வெற்றியை பெற்றது போல அன்புமணி ராமதாஸ் தலைமையில் லோக்சபா தேர்தலில் சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆகையால் திமுக கூட்டணியை நோக்கி பாமக நகருவதில் வியப்பில்லை என்றே கூறப்படுகிறது.

ராகுலுடன் இணையும் கமல்

ராகுலுடன் இணையும் கமல்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக அரசுடன் இணக்கம் காட்டுகிறது. தற்போது அமைச்சராகி உள்ள உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். திமுகவுக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என சலசலப்பை மநீம வெளிப்படுத்தவில்லை. இதனால் மநீமவும் திமுகவை நோக்கி நகருகிறதா? என்கிற கேள்விதான் முன்வைக்கப்பட்டு வந்தது. தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடிகர் கமல்ஹாசனும் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் மநீம இணைகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அச்சாரமாகவே இது பார்க்கப்படுகிறது.

 தேமுதிக எதிர்காலம்

தேமுதிக எதிர்காலம்

நடிகர் விஜயகாந்தின் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேமுதிகவுக்கு இப்போது தேவை உயிர் மூச்சுதான். அந்த மூச்சு காற்றை திமுக கூட்டணியால்தான் தர முடியும் என்பது அக்கட்சியினர் எதிர்பார்ப்பு. ஆனால் தேமுதிகவின் தலைமை வழக்கம் போல பிடிவாதம் பிடித்தால் அக்கட்சிக்கு எந்த ஒரு எதிர்காலமும் இல்லை என்பதும் தேமுதிக சீனியர்கள் எதிர்பார்ப்பு. ஆகையால் ஏற்கனவே உள்ள திமுக கூட்டணியில் மநீம, பாமக, தேமுதிக இணைவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பது உறுதி என்கின்றன அரசியல் வட்டாரங்கள். ஆகையால் இனி வரும் நாட்கள் அரசியல் அரங்கம் பல பரபரப்புகளை எதிர்கொள்ளவே செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+