அசாமில் போலீஸ் - காங்கிரஸ் இடையே தள்ளுமுள்ளு.. ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு.. யாத்திரையில் பரபர
கவுகாத்தி: அசாமில் ராகுல் காந்தி பாத யாத்திரையின் போது போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அண்மையில் தொடங்கினார். அவரது யாத்திரை நாகாலாந்து மாநிலத்தைக் கடந்து பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் நுழைந்தது.

அசாம் தலைநகர் கவுகாத்தி நோக்கி வந்த ராகுல் காந்தியை நகர எல்லைக்குள் போலீசார் தடுத்து நிறுத்தினர். அசாம் நகருக்குள் ராகுல் காந்தியின் யாத்திரை வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் தடுத்து நிறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் யாத்திரை நிறுத்தப்பட்டதால் கோபம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள், போலீஸ் தடுப்புகளை அடித்து நொறுக்கினர்.
இதனால், போலீசாருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல், பல்கலைக்கழகத்துக்கு வந்து உங்களிடையே பேச நினைத் தேன். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் பல்கலைக்கழகத்துக்கு செல்ல விடாமல் தடுக்குமாறு உத்தர விட்டார்.
அதனால் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. மாணவர்களாகிய நீங்கள்தான் நாட்டின் எதிர்காலம். நீங்கள் விரும்பியதை செய்ய அனுமதிக்க வேண்டும். உங்களை சுதந்திரமாக சிந்திக்க அனுமதிக்க வேண்டும்" என்றார். இதற்கிடையே, ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விரும்பத்தகாத வன்முறையில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான கேசி வேணுகோபால், கன்னையா குமார் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications