துபாய் ஷேக் ’அதுக்கு’ ஆசைப்படுறார்! வாட்ஸ் அப்பில் மாணவியிடம் கேட்க கூடாத கேள்வியை கேட்ட சாமியார்
டெல்லி: டெல்லியில் இயங்கி வரும் பிரபல தனியார் கல்வி நிறுவனத்திம் இயக்குநராக உள்ள சாமியார் சைதன்யானந்தா சரஸ்வதி மீது 17 மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து அவரை தேடி வந்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனர். சாமியார் சைதன்யானந்தா தனது வாட்ஸ் அப்பில் இருந்து மாணவிகளிடம் அபத்தமாக பேசிய உரையாடல்கள் வெளியாகி அதிர வைத்துள்ளது.
தலைநகர் டெல்லியில் வசந்த்குஞ் என்ற இடத்தில் ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மெண்ட் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டெல்லியில் மிகப் பிரபலமாக செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் ஏராளமானோர் பயின்று வருகிறார்கள்.

30 மாணவிகளிடம் பாலியல் தொல்லை
இந்த கல்வி நிறுவனத்தின் மேலாளராக இருப்பவர் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி. பார்த்தசாரதி என்ற இயற்பெயர் கொண்ட சைதன்யானந்தா சரஸ்வதி, தன்னைத்தானே சாமியார் என சொல்லிக்கொண்டு பல்வேறு லீலைகளில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகி அதிர வைத்துள்ளது. அதாவது, இந்த சாமியார் 30 மாணவிகளிடம் பாலியல் தொல்லை தந்திருப்பதாக புகார் கிளம்பியது.
குறிப்பாக 17 மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார் சாமியார். அத்துடன் தேவையற்ற டார்ச்சர்களையும் தந்ததால், பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்ததையடுத்து சாமியார் தலைமறைவானார்.
சாமியார் சைதன்யானந்தா
இதனால் அவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். கடந்த இரு மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த சாமியார் சைதன்யானந்தா, ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைதானார்.
கடந்த இரு மாதங்களாக விரிந்தாவன், மதுரா, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் சிறிய ஹோட்டல்களில் தங்கியிருந்த சாமியார், போலீஸ் கவனத்தை திசைதிருப்ப டாக்ஸிகளையும் பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறார். டெல்லி, ஆக்ராவில் கைதான அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது வாட்ஸ் அப்பில் ஆபாசமாக உரையாடியதையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் ஒரு உரையாடலில் துபாய் ஷேக் ஒருவரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், மாணவி ஒருவரிடம் அபத்தமாக சாட் செய்ததும் அம்பலமாகியுள்ளது. அந்த வாட்ஸ் அப் உரையாடலில் சாமியார் 'டெல்லி பாபா' உரையாடியதன் விவரம் வருமாறு:
nice friend இருக்கிறாரா?
டெல்லி பாபா: ஒரு துபாய் ஷேக், செக்ஸ் பார்ட்னர் வேண்டும் என ஆசைப்படுகிறார். உனக்கு தெரிந்தவர்கள் nice friend இருக்கிறாரா?
பாதிக்கப்பட்ட பெண்: அப்படி யாரும் இல்லை
டெல்லி பாபா: அது எப்படி?
பாதிக்கப்பட்டவர்: அதெல்லாம் எனக்கு தெரியாது
டெல்லி பாபா: உன்னிடம் படிப்பவர்கள்.. உனது ஜூனியர் யாராவது?
என அபத்தமாக உரையாடியதை போலீசார் கண்டறிந்து இருக்கிறார்கள்.
மற்றொரு வாட்ஸ் - அப் சாட்
அதே போல மற்றொரு வாட்ஸ் அப் சாட்டில், சாமியார் 'டெல்லி பாபா' பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ஸ்வீட்டி பேபி என்று அடிக்கடி ஆபாச மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார். இரவு பகல் பாராமல் எல்லா நேரத்திலும் இப்படியான மெசேஜ்களை அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து இருக்கிறார் 62 வயதான டெல்லி பாபா.
மற்றொரு பெண்ணிடம் டெல்லி பாபா உரையாடிய விவரமும் கசிந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்டவரை "பேபி" என்று அழைத்து சாட் செய்து இருக்கிறார். மேலும், "டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறேன்... இதில் இணைந்து ஆட விரும்புகிறாயா?" என்று கேட்டுள்ளார். மேலும், "என்னுடன் நீ உறங்க மாட்டாயா?" என பேசியுள்ளார். டெல்லி பாபாவின் இத்தகைய உரையாடல் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications