Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி எல்லை இன்று மூடல்! நியாயம் கேட்டு பெரும்படையாக திரண்டு வாங்க! மல்யுத்த வீராங்கணைகள் உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்கிறார். இந்நிலையில் தான் மல்யுத்த வீராங்கணைகள் இன்று நியாயம் கேட்டு மகளிருக்கான மகாபஞ்சாயத்தை நடத்தும் நிலையில் போராட்டத்தை தவிர்க்க டெல்லி எல்லை மூடப்படுகிறது. இதற்கிடையே தான் நேற்று இரவு மல்யுத்த வீராங்கணைகள் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

டெல்லியில் புதிதாக சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவை திறந்து வைக்காமல் பிரதமர் மோடி திறக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இன்றைய விழாவை காங்கிரஸ், திமுக உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவை அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடத்தி முடிக்கும் நோக்கத்தில் டெல்லி போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

police-have-closed-new-delhi-but-we-request-everyone-to-attend-mahila-panchayat-request-from-wrestl

அதன்படி இன்று டெல்லியின் அனைத்து எல்லைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு முக்கிய காரணம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கணைகள் தான். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளார். இவர் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரிஜ் பூஷன் சரண் சிங் நடவடிக்கை எடுக்க டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றன. தற்போது பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் தான் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. நாளை புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி மல்யுத்த வீரர், வீராங்கணைகளுக்கு ஹரியானா காப்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும் இவர்கள் இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே மகளிருக்கான மகாபஞ்சாயத்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க ஏராளமானவர்கள் டெல்லி வரலாம் என்பதால் தான் டெல்லி எல்லைகளை போலீசார் அதிரடியாக சீல் வைத்து மூட உள்ளனர்.

இதனால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் மல்யுத்த வீராங்கணைகள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது இன்று டெல்லியில் நடக்கும் மகாபஞ்சாயத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி மல்யுத்த வீராங்கணை வினிஷ் போகத் கூறுகையில், ‛‛போலீசார் டெல்லியில் எல்லைகளை மூடிவிட்டனர். ஆனால் அனைவரும் இன்று டெல்லியில் நடக்கும் மகளிருக்கான மகாபஞ்சாயத்தில் பங்கேற்க வரவேண்டும். நாங்கள் வன்முறையில் எதுவும் ஈடுபடாமல் அமைதியான வழியில் நியாயத்துக்காக போராடி வருகிறோம். அனைவரும் இன்று எங்களுக்காக டெல்லி வாருங்கள். காவல்துறையின் அனைத்து வகையான அட்டூழியங்களையும் வன்முறையின்றி எதிர்கொண்டு நியாயம் கேட்போம்'' என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தான் குற்றம்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங், ‛‛நான் அனைத்து வகையான பரிசோதனைகளுக்கு தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நான் தவறு செய்யவில்லை. மேலும் பேராட்டத்தில் ஈடுபடுவோர் தொடர்ந்து தங்களின் நிலைப்பாட்டை மாற்றி வருகின்றனர். நான் நீதிமன்றத்தையும், டெல்லி போலீசாரையும் முழுமையாக நம்புகிறேன். நீதித்துறை சார்பில் எனக்கு தண்டனை அளிக்கப்பட்டால் நான் ஏற்றுக்கொள்வேன்'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+