ஓயோ ரூம்களில் "சீக்ரெட்" கேமரா.. 'அந்தரங்க' வீடியோ எடுத்து மிரட்டல்.. அதிர வைக்கும் மர்ம கும்பல்!
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஓயோ ரூம்களுக்கு வரும் தம்பதிகளை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பலை போலீசார் இப்போது கைது செய்து உள்ளனர்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்படுகிறது. டிக்கெட் புக்கிங் தொடர்ந்து ஷாப்பிங் வரை அனைத்தும் ஆன்லைனில் தான் நடக்கிறது.
அப்படி ஹோட்டல் புக்கிங்கிற்கு இருக்கும் முக்கியமான தளம் தான் ஓயோ. வீடுகளில் இருந்தபடியே நல்ல ஹோட்டல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஓயோ
இருப்பினும், ஓயோ தளத்தைப் பயன்படுத்தி சில மோசடி சம்பவங்களையும் சிலர் செய்து கொண்டு தான் வருகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அரங்கேறி உள்ளது. அங்குக் கும்பல் ஒன்று ஓயோ ரூம்களில் ரகசிய கேமராக்களை வைத்து தம்பதிகள் நெருக்கமாக இருப்பதைப் படம் பிடித்துக் கொள்வார்களாம்.

ஹோட்டல்களுக்கு தொடர்பு இல்லை
பின்னர் அந்த வீடியோக்களை காட்டி அந்த கும்பல் இளம் ஜோடிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு உள்ளனர். பணம் தரவில்லை என்றால் வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என்றும் அந்த கும்பல் மிரட்டி பிளாக்மெயில் செய்யுமாம். இருப்பினும், இந்த மோசடியில் ஹோட்டல் ஊழியர்களுக்குத் தொடர்பு இல்லை என்று போலீசார் முதற்கட்ட விசாரணைக்குப் பின் தெரிவித்து உள்ளனர்.

எப்படி நடக்கும்
நான்கு பேர் கொண்ட இந்த கும்பல் நட்சத்திர ஹோட்டல்களில் ரூம்களை புக் செய்து கொள்வார்கள். அங்குச் செல்லும் இந்த ஜோடி ரூம்களை காலி செய்யும் முன், அங்கு ரகசிய கேமராக்களை வைத்து விட்டுச் செல்வார்களாம். பின் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து கேமராக்களை எடுக்கும் அந்த கும்பல் அதில் பதிவாகி உள்ள வீடியோவை எடுத்து தங்கள் வேலையைத் தொடங்குவார்கள்.

மிரட்டல்
பின் வீடியோவில் நெருக்கமாக இருக்கும் தம்பதியைத் தொடர்பு கொள்ளும் அந்த கும்பல் அந்தரங்க வீடியோவை வெளியிடக் கூடாது என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டி பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார் மற்றும் அனுராக் குமார் சிங் என்று நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கைது
இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். போலி கால் சென்டர் நடத்தியது, போலி சிம்கார்டுகளை சப்ளே செய்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்களிடம் இருந்து 11 லேப்டாப்கள், 21 மொபைல்கள் மற்றும் 22 ஏடிஎம் கார்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். நாடு முழுவதும் பல ஹோட்டல்களில் அவர்கள் இப்படி ரகிய கேமரா வைத்து ரெக்கார்ட் செய்து மிரட்டி பணம் பறித்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

போலீஸ் தகவல்
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடும் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். கும்பலைச் சேர்ந்த ஒருவர் தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில், "குற்றஞ்சாட்டப்பட்ட விஷ்ணு மற்றும் அப்துல் வஹாவ் ஆகியோர் தம்பதிகள் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை அவர்களிடம் அனுப்பி பணம் பறித்து உள்ளனர்.

ஓயோ
மூன்றாவது குற்றவாளி பங்கஜ் போலி சிம் கார்டுகளை இவர்களுக்கு சப்ளே செய்து உள்ளான். தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடி வருகிறோம்" என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஓயோ நிறுவனம் சார்பில் இதுவரை எந்தவொரு விளக்கம் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications