பிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் மாயம்... 'சிறிய தடுமாற்றம்' என சமாளித்த தேர்தல் ஆணையம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தேர்தல் விதிமீறல் புகார்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. தற்போது வரை 3 கட்டங்களாக தேர்தல் நடந்துள்ளது. வரும் மே 19ம் தேதியுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இணையத்தில் வெளியீடு
அப்படி பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தேர்தல் விதிமுறைகளை பேசியவர்கள் மற்றும் செயல்பட்டவர்கள் மீது தேர்தல் விதிமீறல் புகார்கள் கொடுக்கப்பபடுகிறது. அப்படி பதிவான விதிமீறல் புகார்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருந்தது.

மோடிக்கு எதிராக புகார்
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் புல்வாமா தாக்குதல், மற்றும் பால்கோட் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி பேசினார். இது தொடர்பாக தேர்தல் விதிமீறல் புகார் பிரதமர் மோடி மீது ஏப்ரல் 9ம் தேதி கொடுக்கப்பட்டது.

மோடி மீதான புகார் மாயம்
இந்நிலையில் இந்த புகார் மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்ட தேர்தல் விதிமீறல் புகார் பட்டியலில் 426 புகார்கள் காணப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி மீது புகார்கள் மட்டும் மாயமாகி இருந்தது.

புகார் குறித்து கேள்வி
இதுதொடர்பாக மோடிக்கு எதிராக புகார் கொடுத்த கொல்கத்தாவைச் சேர்ந்த மகேந்திரசிங் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், தேர்தல் விதிமீறல் தொடர்பான "சரியான பட்டியல்" தொழில்நுட்ப தவறுகள் காரணமாக இணையதளத்தில் வெளியாகவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

இன்று விளக்கம்
மகாராஷ்டிரா தேர்தல் அதிகாரி பிரதமர் மோடிக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து வருவதாகவும், அவர் இன்று பிற்பகல் 1 மணி அளவில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications