Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படும் எண்ணம் துளியும் இல்லை: ஒரே போடு போட்ட ஆளுநர் ரவி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொன்முடி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தமக்கு துளியும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சராக பதவி வகித்த திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்முடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி. மேலும் பொன்முடி வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

Ponmudi Case Tamil Nadu Governor RN Ravi what told Supreme Court

இதனிடையே தமக்கும் மனைவி விசாலாட்சிக்கும் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதனால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டார். அவரது தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பும் வாபஸ் பெறப்பட்டது. அத்துடன் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் அனுப்பினார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியோ, பொன்முடி மீது ஊழல் கறை படிந்துள்ளது; அவருக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என மறுத்தார். அத்துடன் பொன்முடிக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதே தவிர ரத்து செய்யவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு தமது கருத்தை முன்வைத்தது.

இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டப் போராட்டத்தை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு மேற்கொண்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று ஆளுநர் ரவிக்கு சரமாரி கண்டனம் தெரிவித்தது. மேலும் பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்க நாளை வரை அவகாசம் வழங்குகிறோம்; பொன்முடி விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் தமது முடிவை தெரிவிக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்போம் என இப்போது தெரிவிக்கப் போவது இல்லை; தண்டனையை நிறுத்தி வைத்துவிட்ட பின்னர் எந்த அடிப்படையில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்கிறார் ஆளுந ரவி? பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவு எடுத்து தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றம் உரிய அரசியல் சாசன அடிப்படையிலான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்.
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கூறினால் அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என ஆளுநர் கூற முடியும்? பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என சொல்லும் அதிகாரத்தை ஆளுநர் ரவிக்கு யார்தான் கொடுத்தது? ஆளுநர் அரசியல் சாசனத்தைப் பின்பற்றவில்லை எனில் மாநில அரசு என்னதான் செய்யும்? என்றெல்லாம் அடுக்கடுக்கான கோபக் கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன்வைத்தது.

இதனையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆளுநர் தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தமக்கு துளியும் இல்லை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் அப்படியான ஒரு முடிவை ஆளுநர் எடுக்க நேர்ந்தது. தற்போது பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+