100 கிலோ எடை கொண்ட மனைவி! படுக்கையிலிருந்து தவறி விழுந்ததால் கணவன் பலி!
டெல்லி: போர்ச்சுக்கலை சேர்ந்த 100 கிலோ எடை கொண்ட பெண் ஒருவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது நிலைத்தடுமாறி கீழே படுத்திருந்த கணவர் மீது விழுந்ததால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் விழுந்ததால் அவர் கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி இறந்தார்.
போர்ச்சுக்கல் நாட்டில் கம்பன்ஹா எனும் பகுதியை சேர்ந்தவர் 59 வயதான ஆண். இவர் அந்த மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து வருகிறார். இவரது மனைவிக்கு 60 வயதாகிறது.

மனைவி உடல் பருமன் காரணமாக தற்போது 100 கிலோ எடையுடன் இருக்கிறார். இதனால் இடப்பற்றாக்குறை காரணமாக மனைவி கட்டிலிலும் கணவன் தரையிலும் படுத்து தூங்குவது வழக்கமாம்.
அந்த வகையில் ஒரு நாள் மனைவி படுக்கையில் இருந்து எழுந்திருக்க முற்பட்டார். அப்போது அந்த பெண் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த பெண்ணால் எழுந்திருக்க முடியவில்லை. கணவராலும் அந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியவில்லை.
இதனால் அவர் கட்டிலுக்கும் சுவற்றுக்கும் இடையே சிக்கிக் கொண்டார். இதையடுத்து மனைவி கூச்சலிட்டார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். அவர்கள் அந்த பெண்ணை தூக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அந்த பெண்ணை தூக்க முடியவில்லை.
எனினும் எப்படியோ அந்த பெண்ணே நகர்ந்து விட்டார். எனினும் கணவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.
தன்னால் தனது கணவர் இறந்துவிட்டாரே என நினைத்து அந்த பெண் அழுதுக் கொண்டே இருக்கிறாராம். மேலும் அவருக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவரும் முறையாக திருமணம் செய்து கொள்ளவில்லையாம். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களாம்.
இந்த நிலையில் அந்த பெண்ணை போலீஸார் கைது செய்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இது இயற்கைக்கு மாறான மரணம் என்றாலும் இதில் குற்றம் ஏதும் நடக்கவில்லை என்பதால் அவர் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றே சொல்லப்படுகிறது. மனைவியின் அதிக எடையால் கணவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications