டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் சாவர்க்கர் இல்ல.. என் பேரு ராகுல்! பாஜகவை கதறவிட்ட காங்கிரஸ்! தலைநகரில் கலக்கிய போஸ்டர்கள்..!

Google Oneindia Tamil News

டெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ள நிலையில், " நான் சவர்கர் இல்லை நான் ராகுல் காந்தி, தலை வணங்க மாட்டேன்" என தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதைனையடுத்து அவர் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என தகவல்கள் வெளியானது.

 அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜர்..பிரமாண்ட பேரணியுடன் படையெடுப்பு.. 144 தடையுத்தரவு! அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜர்..பிரமாண்ட பேரணியுடன் படையெடுப்பு.. 144 தடையுத்தரவு!

ராகுல்காந்தி எம்பி

ராகுல்காந்தி எம்பி

இதற்கிடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று சுமார் 11.25 மணியளவில் விசாரணைக்காக ஆஜரானார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சித் தரப்பில் அமைதி வழிப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதோடு, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை வழக்கு

அமலாக்கத்துறை வழக்கு

ராகுல் காந்தி மீது அரசியல் கால்புணர்ச்சியுடன் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், வேண்டுமென்றே அவர் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு 2015ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அரசியல் காரணங்களுக்காக மீண்டும் விசாரணை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

 காங்கிரஸ் போஸ்டர்

காங்கிரஸ் போஸ்டர்

இதன் காரணமாக டெல்லி போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்துள்ளனர். ராகுல் காந்தியின் இல்லத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு முழக்கமிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் ராகுலின் இல்லத்தில் இருந்து போஸ்டர் பிரசாரத்தைமேற்கொண்டுள்ளனர். அதில், "நான் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி", "மோடி, ஷா .. நான் ராகுல் காந்தி, தலைவணங்க மாட்டேன்" போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் போராட்டம்

இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், பல காங்கிரஸ் பிரமுகர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அதனை பகிர்ந்து வருகின்றன. தற்போது ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேபோல் புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
As former Congress leader Rahul Gandhi appeared in the Enforcement Department office today in connection with the National Herald case, posters pasted on behalf of the Congress in the capital, Delhi, saying, "I am not Savarkar, I am Rahul Gandhi, I will not bow my head" are spreading fast on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X