மன்னிப்பு கோருகிறேன்.. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.. பிரக்யா தாக்கூர் பரபரப்பு!
கோட்சேவை தேச பக்தி மான் என்று புகழ்ந்து பேசியதற்காக லோக்சபாவில் இன்று மன்னிப்பு கோரினார் பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூர்.
Recommended Video
டெல்லி: கோட்சேவை தேச பக்தி மான் என்று புகழ்ந்து பேசியதற்காக லோக்சபாவில் இன்று மன்னிப்பு கோரினார் பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூர். ஆனால் தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்கள் முன் லோக்சபாவில் எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடந்தது. இதில் திமுக சார்பாக பேசிய எம்பி ஆ. ராசா, நாம் இங்கு கோட்ஸேவை நினைவு கூற வேண்டும். அவர் காந்தியை கொன்றதாக தானே ஒப்புக்கொண்டு இருக்கிறார். காந்தி மீது 37 வருடம் இருந்த காழ்புணர்ச்சி காரணமாக அவரை கொன்றேன் என்று ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்று ஆ. ராசா பேசினார்.
இதற்கு எதிராக உடனடியாக பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் குறுக்கிட்டார். அதில், கோட்ஸே ஒரு தேச பக்திமான். நீங்கள் ஒரு தேச பக்திமானை பற்றி இங்கு எடுத்துக்காட்டு கொடுத்து பேச கூடாது. அது மிகவும் தவறு என்று குறிப்பிட்டார். இதனால் அவையில் பெரிய சர்ச்சை உருவானது.

சர்ச்சை
இந்திய அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக இது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் இன்று மக்களவையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பாஜகவிற்கு எதிராகவும், பிரக்யா தாக்கூருக்கு எதிராகவும் கடுமையாக பேசினார்கள். மக்களவை கூட்டத்தொடரில் இருந்து பாஜக பிரக்யா தாக்கூரை நீக்கி இருந்த நிலையிலும் கூட, இன்று அவர் அவையில் கலந்து கொண்டார்.

விளக்கம் என்ன
அவையில் இன்று பிரக்யா தாக்கூர் கோட்சே குறித்த தன்னுடைய கருத்துக்கு விளக்கம் கொடுத்தார். அதில், நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக தவறாக திரிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்டார்
இதனால் யாராவது புண்பட்டு இருந்தால், நான் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். ஆனால் என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என்னை எல்லோரும் தீவிரவாதி என்று அழைக்கிறார்கள். ஆனால் எனக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் கிடையாது, என்று பிரக்யா குறிப்பிட்டார்.

காங்கிரஸ் மறுப்பு
ஆனால் அவரின் மன்னிப்பை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. பிரக்யாவின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளி செய்தனர்.பிரக்யாவை அவையை விட்டு வெளியேறும்படி கூறி எதிர்க்கட்சிகள் அமளி செய்தனர்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications