விவசாயிகள் விரும்பினால்... பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ரெடி.. பிரகலாத் ஜோஷி உறுதி!
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயாராக இருக்கிறார் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
விவசாயிகள் போனில் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால் கலந்துரையாட பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் என்று அவர் கூறினார்.
மத்திய அரசு, விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வி அடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2 மாதங்களாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை விவசாயிகள் தலைவர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே 12 முறை பேச்சுவார்த்தைகள் நடந்தன.

திசைமாறிய பேரணி
ஆனால் அனைத்தும் தோல்வியடைந்தன. இதனையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. சில வன்முறைகள் சம்பவம நடந்தன, ஒரு விவசாயி உயிரிழந்தார். போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசினார்கள். டெல்லியில் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் தற்போதும் போராடி வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு தயார்
இனிமேல் பேச்சுவார்த்தைக்கு தானாக முன்வர முடியாது, விவசாயிகளே ஒரு முடிவு எடுத்து வந்தால்தான் ஒத்துழைப்போம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடியே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விவசாயிகள் விருப்பம் வேண்டும்
இது தொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:- டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயாராக இருக்கிறார். விவசாயிகள் போனில் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால் கலந்துரையாட பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications