பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக
டெல்லி ஆர் ஆர் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி (84). இவர் மத்திய நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருந்தார். இவர் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
Recommended Video
இவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த திங்கள்கிழமை மூளையில் ரத்தக் கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் தொடர்ந்து செயற்கை சுவாசி கருவி மூலமே சுவாசம் கொடுக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதனிடையே அவருக்கு கொரோனா பாதிப்பும் இருக்கிறது. இதுகுறித்து ஆர் ஆர் ராணுவ மருத்துவமனை கூறுகையில் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் மிகப் பெரிய ரத்தக் கட்டி இருந்தது. இது கடந்த திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவர் வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்ததாகவும் உறவினர்கள் கூறினர். அதனால் மூளையில் ரத்தம் கட்டிவிட்டது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சென்று நலம் விசாரித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரணாபின் மகள் ஷர்மிஸ்தாவிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பிரணாப் உடல்நிலை சீராக வேண்டிய பலர் பிரார்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். சமூகவலைதளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications