டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனையை அன்று ஆதரித்த பிரசாந்த் பூஷன்!

Google Oneindia Tamil News

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதேபோன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்த போது அதை பிரசாந்த் பூஷன் வரவேற்றிருந்தார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருக்கும் படம் ஒன்று வெளியானது. இதனை தமது சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சித்திருந்தார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

இதற்காக பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அத்துடன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிரசாந்த் பூஷன் நீதித்துறையை அவமதித்து பேட்டி அளித்தார் என்கிற வழக்கும் மீண்டும் கையில் எடுக்கப்பட்டது.

வடகொரியா...உணவுப் பஞ்சம்...இறைச்சியாகும் செல்லப்பிராணி நாய்கள்..கிம் ஜாங் உத்தரவு!!!வடகொரியா...உணவுப் பஞ்சம்...இறைச்சியாகும் செல்லப்பிராணி நாய்கள்..கிம் ஜாங் உத்தரவு!!!

பிரசாந்த் பூஷன் குற்றவாளி - நாளை தண்டனை

பிரசாந்த் பூஷன் குற்றவாளி - நாளை தண்டனை

இந்த வழக்குகளில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்றும் அவருக்கான தண்டனை நாளை (ஆகஸ்ட் 20) வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பிரசாந்த் பூஷனுக்கு எதிரான இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தியும் உள்ளனர்.

நீதிபதி கர்ணன் விவகாரம்

நீதிபதி கர்ணன் விவகாரம்

3 ஆண்டுகளுக்கு முன்னர் 2017-ம் ஆண்டு நீதிபதி கர்ணன், இதேபோல் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக 6 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது. தாம் ஒரு தலித் என்பதால் அவமதிக்கப்படுகிறேன் என்பதில் தொடங்கி நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் வரை நீதிபதி கர்ணன் அடுக்கி இருந்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராகவும் அதிரடி உத்தரவுகளையும் அப்போது நீதிபதி கர்ணன் பிறப்பித்தார்.

நீதிபதி கர்ணன் தலைமறைவு- சிறை

நீதிபதி கர்ணன் தலைமறைவு- சிறை

இதனால் அவருக்கு மனநிலை பரிசோதனை செய்யவும் கூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஒருகட்டத்தில் நீதிபதி கர்ணன் தலைமறைவாகவும் நேரிட்டது..அந்த தலைமறவுகாலத்திலேயே அவர் பணி ஓய்வும் பெற்றார்.

Recommended Video

    Sterlite ஆலையை மீண்டும் திறக்க கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி
    சிறை தண்டனைக்கு பிரசாந்த் பூஷன் ஆதரவு

    சிறை தண்டனைக்கு பிரசாந்த் பூஷன் ஆதரவு

    அதற்கு பின்னரும் அவர் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனையை முழுமையாக அனுபவிக்கவும் செய்தார். நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் சிறை தண்டனை விதித்த போது அன்று அதை பிரசாந்த் பூஷன் வரவேற்றிருந்தார்.

    English summary
    Three years ago, senior Advocate Prashant Bhushan had supported the Supreme court's Verdict against Justice Karnan in Contempt of court case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X