Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛விஜயகாந்த் இல்லையே’’.. பத்ம பூஷன் விருது வாங்கியதும் பிரேமலதா தந்த ரியாக்ஷன்.. கலங்கிய கண்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இருந்து பிரேமலதா விஜயகாந்த் பெற்று கொண்டார். இந்த வேளையில் ஜனாதிபதியிடம் விருது வாங்கியதும் பிரமேலதா விஜயகாந்த் மேல்நோக்கி பார்த்து கொடுத்த ரியாக்ஷன் கலங்க வைத்தது.

நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் விஜயகாந்த். தேமுதிக கட்சியை தொடங்கி தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வரை பயணித்தார். தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக விஜயகாந்த் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

Premalatha gets emotional after gets his husband Vijayakanth s Padma Bhushan award from presidents Droupadi Murmu

இதையடுத்து இருந்து ஒதுங்கி இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தினமும் அங்கு ஏராளமானவர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற விழாவில் விஜயகாந்த் பத்ம பூஷன் விருது வழங்கப்படவில்லை. 2வது கட்டமாக இன்று பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.

இந்த விழாவில் விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இருந்து பிரேமலதா விஜயகாந்த் பெற்று கொண்டார். ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கையில் இருந்து விருதை பெற்றவுடன் பிரேமலதா விஜயகாந்த் மேல்நோக்கி பார்த்து லேசாக உணர்ச்சி வசப்பட்டார். விஜயகாந்த் மறைந்த நிலையில் மத்திய அரசு தந்த பத்ம பூஷன் விருதை அவருக்கு சமர்ப்பிக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் மேல்நோக்கி பார்த்தார்.

இந்த விழாவில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி சுதீஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று இருந்தவர். பிரேமலதா விருது வாங்கியபோது அவர்கள் கைத்தட்டினர். இந்த வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது விஜயகாந்த் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

இந்த பத்ம விருது வழங்கும் விழாவில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‛‛கேப்டன் இல்லை என்ற மிகப்பெரிய மனவலி உள்ளது. ஆனாலும் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது வாங்குவதில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் பெருமையடைகிறது. கேப்டன் நம்முடன் இல்லாவிட்டாலும் கூட இந்த விருதை நேரடியாக அவருக்கு சமர்ப்பிக்கிறோம்.

அதுமட்டுமில்லை, அவரை விரும்பிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களுக்களுக்கும் கேப்டனின் உயரிய விருது பத்ம பூஷனை சமர்ப்பிக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்'' என உருக்கமாக தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+