100 நாள் வேலை திட்டம்.. விபி-ஜி ராம் ஜி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்
டெல்லி: விபி-ஜி ராம் ஜி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். லோக்சபா, ராஜ்யசபாவில் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை விபி-ஜி ராம் ஜி என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்தது.
அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் நிலையில், இந்த சட்டத்தின் மூலம் இனி 100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது.

100 நாள் திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டம் மத்திய அரசால் விபி-ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இனி 100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
100 நாள் திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்ததற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
மகாத்மா காந்தி பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. எனினும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விபி-ஜி ராம் ஜி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
எனினும் இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றும், கிராம மக்களுக்கு வேலையிழப்பும், அரசுக்கு நிதி சுமையும் உண்டாகும் என்று கவலை தெரிவித்துள்ளன.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications