‛‛நீட் நீட்’’.. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோஷம்! உரையின்போது ஜனாதிபதி கூறிய முக்கிய தகவல்
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் சாதனைகளை அவர் படித்து வந்தபோது ‛நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் ‛நீட்.. நீட்’ என கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுதுதொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது உரையின் மூலம் விளக்கம் அளித்தார்.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 272 இடங்களில் வெல்ல வேண்டும்.

7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு கடந்த 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது எந்த கட்சிக்கும் மத்தியில் ஆட்சியமைக்க தேவையான 272 எம்பிக்கள் கிடைக்கவில்லை.
இதனால் 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறிய பாஜக தனது கூட்டணி கட்சிகளின் 53 எம்பிக்களின் ஆதரவில் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. மீண்டும் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ளார். மோடியுடன் சேர்த்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர்.
இதையடுத்து கடந்த 24ம் தேதி நாடாளுமன்றததின் லோக்சபா கூடியது. புதிதாக தேர்வான எம்பிக்கள் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பதவியேற்றனர். அதன்பிறகு நேற்று லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடந்தது. இதில் குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜக கூட்டணி வேட்பாளரான ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அவர் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளரான கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சுரேசை வீழ்த்தி சபாநாயகர் பதவியை மீண்டும் கைப்பற்றினார்.
தேர்தலில் வென்று சபாநாயகரான ஓம் பிர்லாவை பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் லோக்சபா எம்பிக்கள் மற்றும் ராஜ்யசபா எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றி வருகிறார்.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முதல் நாடாளுமன்ற கூட்டம் என்பது ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அந்த வகையில் தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்து அதில் வென்றவர்கள் எம்பிக்களாக பொறுப்பேற்றுள்ளனர். சபாநாயகர் தேர்தலும் முடிவடைந்த நிலையில் முதல் முறையாக புதிய லோக்சபா எம்பிக்களுடன், ராஜ்யசபா எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வர உள்ளனர். இந்நிலையில் தான் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது: ‛‛லோக்சபா தேர்தலில் வென்று வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள். தேர்தலை அமைதியாக நடத்திய தந்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கம் வாழ்த்துகள்‛‛ என்று உரையாற்றி வந்தார். இந்த வேளையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், ‛‛நீட்.. நீட்’’ என்று கோஷமிட்டனர். நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அவர்கள் கோஷமிட்டனர்.
இதற்கு ஜனாதிபதி திரெளபதி முர்வு தனது உரையின் மூலம் பதிலளித்தார். அதாவது ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது உரையில், ‛‛போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க கடும் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. வினாத்தாள் கசிவு பிரச்சனையை களைய கட்சி , அரசியலை தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும். வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்'' என கூறினார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ‛‛நீட்.. நீட்..’’ என்று கோஷமிட்டதால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications