உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் நீதிபதி எஸ்ஏ போப்டே.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்ஏ போப்டே பொறுப்பேற்க உள்ளார்.
Recommended Video
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்ஏ போப்டே பொறுப்பேற்க உள்ளார். நவம்பர் 18ம் தேதி இவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தற்போது நீதிபதி ரஞ்சன் கோகாய் இருக்கிறார். இவர் கடந்த வருடம் 13 மாதங்களுக்கு முன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நவ. 17ம் தேதியோடு தலைமை நீதிபதி கோகாய் பதவிக்காலம் முடிகிறது.

தன்னுடைய பதவிக்காலத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முக்கியமான தீர்ப்புகள் பலவற்றை விசாரித்தார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை என்று இவர்தான் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற விசாரணை தேவையா என்பது குறித்த மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. மிக முக்கியமாக அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்ட ஐந்து பேர் அமர்வுதான் தீர்ப்பு வழங்க உள்ளது.
இவரின் பதவிக்காலம் நவம்பர் 17ம் தேதி முடிய உள்ளதால், அதற்கு முன் இந்த இரண்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்ஏ போப்டே பொறுப்பேற்க உள்ளார். நவம்பர் 18ம் தேதி இவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி எஸ்ஏ போப்டேவை பரிந்துரை செய்துள்ளார். வழக்கப்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்ய வேண்டும். வயது அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி எஸ்ஏ போப்டேவை பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதி எஸ்ஏ போப்டே நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். 1978ல் இருந்து நீதிபதி எஸ்ஏ போப்டே சட்டத்துறையில் இருக்கிறார். இவர் 2000ல் மும்பை ஹைகோர்ட் நீதிபதியாக தன்னுடைய பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications