விழாவில் பங்கேற்காத அத்வானி.. வீட்டிற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கிய ஜனாதிபதி திரௌபதி முர்மு
டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளார்.
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த பிப்ரவரி 9ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா உணவுப் பஞ்சத்தில் தவித்தபோது பசுமைப் புரட்சியை முன் நின்று நடத்தி நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்தான் எம்.எஸ்.சுவாமிநாதன். அவரது உழைப்புக்கும், தொண்டுக்கும் 'பாரத ரத்னா’ விருது சிறந்த அங்கீகாரமாகும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், எல்.கே.அத்வானி, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் கர்பூரி தாக்குருக்கு விருது அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. அதாவது பாஜகவின் கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் இதுவரை வெறும் 7 பேருக்கு மட்டுமே பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தேர்தல் நடைபெறும் 2024ம் ஆண்டில் மட்டும் 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
இதில் அத்வானி தவிர மற்ற தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை. இந்த தலைவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் மற்றும் சோசலிஸ்ட் தலைவர்களாவார்கள். இருப்பினும் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
இன்னும் விளக்கமாக சொல்வதெனில் பீகாரில் பாஜக செல்வாக்கை பெருக்க கர்பூரி தாக்கூருக்கு விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல உத்தரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர 170 நாட்கள் பிரதமர் பதவியை வகித்த சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது.
ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு விருது அறிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
நேற்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. நரசிம்ம ராவ், சரண் சிங் குடும்பத்தினர் இன்று குடியரசுத் தலைவரிடமிருந்து விருதை பெற்றுக்கொண்டனர். அதேபோல எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் விருதை பெற்றுக்கொண்டனர். கர்பூரி தாக்குருக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரது வீட்டிற்கு சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக அத்வானி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications