Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மசோதா ஒப்புதலுக்கு கெடு.. ஜனாதிபதி கேள்வி வழக்கிற்கு தமிழக அரசு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆர்என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மசோதா ஒப்புதலுக்கு ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் காலநிர்ணயம் செய்தது. இந்த காலக்கெடு குறித்து ஜனாதிபதி திரெளபதி முர்மு 14 கேள்விகள் எழுப்பிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் வழக்கு விசாரணைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யக்கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதியில் இருந்து விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தது.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிப்பது இல்லை எனவும், மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் ஆளும் திமுக அரசு கடுமையாக குற்றம்சாட்டியது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கோரி இடையூறு ஏற்படுத்துகிறார் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

supreme court droupadi murumu

இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் முடிவில் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தமிழக அரசு அனுப்பிய நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. அதுமட்டுமின்றி அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு கால நிர்ணயம் செய்தது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு ஒரு மாதம் வரையும், ஜனாதிபதிக்கு 3 மாதம் வரையும் கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரெளபதி முர்மு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143(1)ன்படி வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றத்தால் காலநிர்ணயம் செய்ய முடியுமா? என்று கேள்வி இருந்தார்.

இதுபற்றிய விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உள்பட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது திரெளபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு ஒருவாரம் கழித்து வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோரின் அமர்வு விசாரணை நடத்தியது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏஎம் சிங்வி மற்றும் பி வில்சன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது வழக்கு விசாரணைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதியின் கேள்வி தொடர்பானவற்றை திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. கேரளா அரசு சார்பிலும் விசாரணைக்கு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்களை ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் அம்ன் மேத்தா அமன் மேத்தா மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் வழக்கறிஞர் மிஷா ரோஹத்கி ஆகியோர் ஆவணங்களைத் தொகுத்து சமர்ப்பிக்கும் பணியின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்ததோடு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதி முதல் விசாரிப்பதாக கூறி உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.

மேலும் ஆகஸ்ட் 19, 20, 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அட்டர்னி ஜெனரல் மற்றும் மத்திய அரசு தரப்பு வாதங்களை நீதிமன்றம் கேட்கும். அதன்பிறகு எதிர்க்கட்சிகளின் வாதங்களை ஆகஸ்ட் 28, செப்டம்பர் 2, 3 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் நீதிமன்றங்கள் கேட்கும். தேவை என்றால் செப்டம்பர் 10ம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+