சித்திகளுக்கு மட்டுமல்ல..இந்திய அமெரிக்கர்களுக்கும் பெருமிதமான தருணம்: கமலா ஹாரிஸுக்கு மோடி வாழ்த்து
டெல்லி: உங்களது சித்திகளுக்கு மட்டுமல்ல... இந்திய அமெரிக்கர்களுக்கும் பெருமிதமான தருணம் என்று அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றுள்ளார். அமெரிக்காவின் துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ்நாட்டை தாய்வழி பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ்.

தனித்தனி வாழ்த்து
அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோபிடன், துணை அதிபராகும் கமலா ஹாரீஸ் ஆகியோருக்கு அதிகாலையில் ட்விட்டர் மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இருவருக்கும் தனி தனி ட்விட்டர் பதிவுகள் மூலமாக பிரதமர் மோடி வாழ்த்து கூறியிருந்தார்.

இருதரப்பு உறவு
ஜோ பிடனுக்கான பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியில், துணை அதிபராக இருந்த காலத்தில் இந்தியா- அமெரிக்காவின் உறவுக்கு முக்கிய பங்களிப்பு செய்தீர்கள். இந்த உறவுகள் மேம்படைய உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

உங்கள் சித்திகளுக்கு மட்டும் அல்ல
கமலா ஹாரிஸுக்கான வாழ்த்து செய்தியில், இந்த வெற்றியானது உங்களுடைய சித்திகளுக்கு மட்டுமல்ல.. இந்திய அமெரிக்கர்களுக்கும் பெருமைக்குரிய தருணம் இது. இந்தியா- அமெரிக்காவின் உறவுகள் மேலும் வலிமையடையும் என எதிர்பார்க்கிறேன் என கூறியிருந்தார் பிரதமர் மோடி.

சித்தி என குறிப்பிட்டது ஏன்?
கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக பிரசாரம் செய்த கமலா ஹாரிஸ் தமது குடும்பத்தினரை பற்றி குறிப்பிடுகையில் சித்திகளும் என தமிழில் கூறியிருந்தார். இந்த சித்தி என்ற உச்சரிப்பு அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. அதையே பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications