"சட்டம் எதுவுமில்லை.. இந்துக்களே அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்!" விநோத காரணம் கூறும் சாமியார்
டெல்லி: இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அதைத் தடுக்க சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பூசாரி யதி சத்யதேவானந்த சரஸ்வதி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் தஸ்னா தேவி கோயிலில் உள்ள முக்கிய சாமியார்களில் ஒருவர் அகில பாரதிய சந்த் பரிஷத்தின் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி. 58 வயதான இவர் தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹரித்துவாரில் இந்து அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யதி நரசிங்கானந்த், இஸ்லாமியர்கள் குறித்துத் தெரிவித்த கருத்துகள் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.

ஹரித்துவார்
ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சாமியார்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தனர். இந்தச் சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து 58 வயதான யதி நரசிங்கானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி இவர் தொடர்ந்து வழக்கில் கடந்த வாரம் தான் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இதை அகில பாரதிய சந்த் பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மற்றொரு சாமியார் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேசம்
அதாவது ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் நடைபெற்ற 'தரம் சன்சாத்' மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதைத் தவிர்க்க இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று இந்துக்களிடம் அகில பாரதிய சந்த் பரிஷத்தின் சாமியார் யதி சத்யதேவானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தான் இந்தியா இன்னும் ஜனநாயக நாடாக உள்ளது.

இந்துக்கள்
ஆனால் திட்டமிட்ட முறையில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்து முஸ்லிம்கள் தங்கள் மக்கள்தொகையை அதிகரித்து வருகின்றனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது, அண்டை நாடான பாகிஸ்தானைப் போல இந்தியாவும் இஸ்லாமிய நாடாக மாற்றப்படும். அதனால்தான், இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதைத் தவிர்க்க, இந்துக்களிடம் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதிக குழந்தைகள்
நாட்டில் ஒரு குடும்பத்தினர் இரு குழந்தைகளை மட்டுமே பெற்று எடுக்க வேண்டும் என்று எந்தவொரு சட்டமும் இல்லை. எனவே, இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். கடந்த முறை நடைபெற்ற 'தரம் சன்சாத்' மாநாடு நாட்டில் சர்ச்சையைக் கிளப்பி இருந்த நிலையில், இந்த ஹிமாச்சல பிரதேச 'தரம் சன்சாத்' மாநாட்டில் சர்ச்சைக்குரிய கருத்துகளை எதையும் தெரிவிக்கக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications