Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போருக்கு மத்தியில் பூத்த நம்பிக்கை! பிரதமர் மோடி சொன்ன 'அந்த' வார்த்தை.. நெகிழ்ந்து போன நெதன்யாகு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் தற்போது பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசி நிலைமைகளை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். அதேபோல இந்தியர்கள் இஸ்ரேலுடன் இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

 Prime Minister Modi comforted Netanyahu that Indian people stand firm with Israel at the time

இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள்.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையினர் இதற்கு முன்னர் கூட சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், வரலாற்றில் நேற்று முன்தினம் நடந்த மோதல் அளவுக்கு மிக வீரியமான தாக்குதலை ஹமாஸ் இதற்கு முன்னர் நடத்தியதில்லை. எனவேதான் தற்போது இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பேசு பொருளாகியுள்ளது. தற்போது வரை இஸ்ரேலில் 900க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுபோல 2,500க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

 Prime Minister Modi comforted Netanyahu that Indian people stand firm with Israel at the time

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி வாயிலாக பேசி நிலைமையை பகிர்ந்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் கூறிய வார்த்தை நெத்யாகுவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்வீட்டில், "தொலைபேசி வாயிலாக தற்போதைய நிலவரம் குறித்து பகிர்ந்துகொண்டதற்காக நெதன்யாகுவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறார்கள். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். பாலஸ்தீனம்-இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாக மாறியிருக்கிறது. அதாவது நேரு காலத்தில் இந்தியா பாலஸ்தீனத்தின் பக்கம் நின்றது. பாலஸ்தீனம் என்ற நாட்டை மட்டுமே இந்தியா அங்கீகரித்தது.

கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டபோது, அதை எதிர்த்து வாக்களித்த மிக சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1950ம் ஆண்டு இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தாலும், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு இஸ்ரேலுடன் எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் விதமாக 'பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்போம்' என இந்தியா அஞ்சல் தலையை கூட அப்போது வெளியிட்டது. இவ்வளவு ஏன்? இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும் என பிரபல அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வலியுறுத்தியபோது கூட நேரு அதை ஏற்கவில்லை.

பாலஸ்தீனத்திற்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்திருக்கிறது. ஆனால் சோவியத் யூனியன் வீழ்ந்த போது பாலஸ்தீனம் குறித்த நிலைப்பாட்டில் இந்தியா பெரும் மாற்றத்தை கண்டது. கொஞ்சம் கொஞ்சமாக உதவிகள் குறைய தொடங்கின. ஒரு கட்டத்தில் இஸ்ரேலுடன் இந்தியா நெருக்கமாக தொடங்கியது. கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு சென்றார். இந்திய வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் முன்னெப்போதும் நடந்ததில்லை. சுதந்திர இந்தியாவின் எந்த பிரதமரும் இஸ்ரேலுக்கு சென்றது கிடையாது. இப்படி இருக்கையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியிருப்பது பெரும் கனவனத்திற்கு உள்ளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+