தோளில் கை வைத்த மோடி.. பஞ்சதந்திர கதையை விட்டுடாதீங்க.. பிரதமரின் அட்வைஸ் கேட்டு பூரித்த வீரர்கள்
டெல்லி: நாட்டின் முன்னணி ஆன்லைன் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். அப்போது பஞ்சதந்திர கதைகளை மையப்படுத்தி ஆன்லைன் கேம்ஸ்களை கொண்டு வர வேண்டும் என்று விளையாட்டு வீரர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பரபரப்பு தீவிரமடைந்துள்ளது. கடந்த 2019ம் ஆணடை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட் தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்குகிறது. எனவே அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், முன்னணி ஆன்லைன் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பாக 30 நிமிட வீடியோவை இன்று மோடி வெளியிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களை தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விவரித்திருக்கிறார். இது குறித்து அவர் x சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது,
* ஆன்லைன் விளையாட்டை மக்கள் எவ்வகையில் பார்க்கின்றனர் என்று பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
* ஆன்லைன் விளையாட்டில் வீரர்கள் மேற்கொண்ட முன்னேற்றங்களை பற்றி தெரிந்து கொண்டார்.
* மேலைநாட்டு ஆன்லைன் விளையாட்டுகளை போல வக்கிரம், சண்டை போன்றவை இல்லாமல், நம் நாட்டு பஞ்சதந்திர கதை போன்றவற்றை ஆன்லைன் விளையாட்டில் சேர்ப்பது பற்றி மோடி ஆலோசித்தார்.
* புவி வெப்பமயமாதல் மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்த விளையாட்டுகளை அறிமுகப்படுத்த கேட்டுக்கொண்டார்.
* விளையாட்டு வீரர்களை விட Gaming Developers நாட்டில் அதிகமாக வர வேண்டும் என தனது ஆவலை வெளிப்படுத்தினார்.
* ஆன்லைன் விளையாட்டுகள் Open Source ஆக இருந்தால், விளையாட்டினை ஒவ்வொரு படிநிலையாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும் என தனது கருத்தை தெரிவித்தார்.
* அந்நிய நாட்டு விளையாட்டுகளை பிரபலப்படுத்துவதை விட உள்நாட்டிலேயே புதிய புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்த ஊக்கப்படுத்தினார்.
* ஆன்லைன் விளையாட்டு துறையை மேம்படுத்த அரசு சார்பில் என்னென்ன செய்ய வேண்டும் என பங்கெடுத்தோரிடம் கருத்துக்களை மோடி கேட்டு அறிந்தார்.
* சூதாட்டம் வேறு விளையாட்டு வேறு என அறிவுறுத்தி விளையாட்டில் மட்டும் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
* அவர்களின் தோளில் கை வைத்து, "எப்பொழுதும் கையெழுத்தை தாய் மொழியில் இடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.
* உற்சாக மிகுதியில் மாணவர்கள் பிரதமருக்கு ஆன்லைன் விளையாட்டை கற்றுக் கொடுத்து அவரையும் விளையாட வைத்தனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications