இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸுடன் பிரதமர் மோடி பேச்சு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லி: இங்கிலாந்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் லிஸ் டிரசுடன் பிரதமர் மோடி இன்று பேசினார். தொலைபேசி வாயிலாக இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்.
இங்கிலாந்தில் பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலகியதை அடுத்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாகியுள்ளார்.
புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் டிரஸ்சுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேசினார்.

பிரதமர் மோடி வாழ்த்து
இந்த உரையாடலின் போது, இங்கிலாந்து பிரதமராக தேர்வு ஆகியுள்ள லிஸ் டிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கலும் பிரதமர் மோடி தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள லிஸ் டிரஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் கூறினார்.

விரிவாக ஆலோசனை
இதற்கு முன்பு வர்த்தக அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும் இருந்த போது இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரு தரப்பு உறவுகளுக்காக லிஸ் டிரஸ் அளித்த பங்களிப்புகளையும் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். மேலும் இரு தலைவர்களும் இருநாடுகளின் உறவுகள் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்கான விரிவான திட்டத்தை அமல்படுத்துதல், வர்த்தக பேச்சுவார்த்தைகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்பாடு ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

லிஸ் டிரஸ் நன்றி
130 கோடி இந்தியர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடியின் ஆழ்ந்த இரங்கலுக்கு பிரதமர் லிஸ் டிரஸ் நன்றி தெரிவித்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவின் முக்கியத்துவம் குறித்தும் விரைவில் நேரடியாக சந்தித்துக்கொள்வதை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பேச்சுவார்த்தை
பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்திய பிரதமர் மோடியும், லிஸ் டிரசும் பேசிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications