அற்புதமான நடிப்பால் தொடர்ந்து மக்களை மகிழ்வியுங்கள்.. ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
டெல்லி: இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் 'நடிகர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.

'தனது அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து மகிழ்விக்கட்டும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரட்டும்' என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இயக்குநர் கே பாலசந்தரால் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த், 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆங்கிலம் என 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 71வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி உள்ளனர். ரஜினிகாந்த்துக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் 'நடிகர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்; தனது அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து மகிழ்விக்கட்டும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரட்டும்' என்று தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications