நம்பர் 1 வீரர் கார்ல்சனை செஸ்ஸில் வென்ற பிரக்யானந்தா.. தமிழக வீரரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தமிழக இளம் வீரரான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியில் தோற்கடித்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.

சென்னை பாடியில் பிறந்த சிறுவனான பிரக்ஞானந்தா உலக அளவில் செஸ் போட்டி களில் அசத்தி வருகிறார்.5 வயது முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் ஏழு வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

10 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்ற அவர் இளவயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதேபோல் பல பட்டங்களையும் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராபிட் செஸ் போட்டி

ராபிட் செஸ் போட்டி

இந்நிலையில் இணைய வழியே நடைபெறும் ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியில் இளம் வயதில் வீரரான பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். இந்த போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனும் கலந்து கொண்டார். தொடரில் வெற்றி தோல்வி என அடுத்தடுத்து விளையாடிய பிரக்ஞானந்தா கடைசியாக ஏழு சுற்றுக்களில் விளையாடி ஒரு வெற்றி 4 தோல்விகள் இரண்டு ட்ராக்கள் என போராடி வந்தார். குறிப்பாக கடைசியாக அவர் விளையாடிய 3 ஆட்டங்களிலும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது.

நம்பர் 1 வீரர்

நம்பர் 1 வீரர்

தொடரில் பங்கேற்ற உலகின் நம்பர்-1 செஸ் வீரர் கார்ல்சன் மூன்று ஆட்டங்களில் வென்றிருந்த நிலையில் 8-வது சுற்றில் பிரியானந்தா உடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனை எதிர்கொள்கிறோம் என்ற பரபரப்பு இல்லாமல் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனுக்கு எதிராக கருப்பு நிற காய்களுடன் அற்புதமாக விளையாடி முப்பத்தி ஒன்பது நகர்த்தல்களில் வெற்றி பெற்றார். கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா பெற்றுள்ள முதல் வெற்றி இது.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தொடரில் ஏற்று சுற்றுகளின் முடிவில் 8 புள்ளிகளுடன் 12ஆம் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. அவருக்கு முன்னர் 6 இடங்களில் அதாவது 13 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளார் கார்ல்சன். இனைய வழி ரபிட் செஸ் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்று நிலையில் ஒவ்வொரு வெற்றிக்கும் மூன்று புள்ளிகளும் டிராவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகிறது.

குவியும் வாழ்த்துகள்

குவியும் வாழ்த்துகள்

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரை வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு எதிரான பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது. திறமை மிகுந்த பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+