மோடி அரை மணி நேரம் பேசினார்.. என்ன பேசினார் என்பதுதான் புரியவில்லை.. ஹிந்தி பேசும் மக்களே ஆதங்கம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சுமார் அரை மணி நேரம் நேற்று இரவு உரையாற்றினார். ஆனால் என்ன பேசினார் என்பது தான் புரியவில்லை என்று பல நெட்டிசன்கள் ஆதங்கம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Recommended Video
கொரோனா வைரஸ் பிரச்சினை தொடர்பாக நேற்று இரவு 8 மணி அளவில் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
சுமார் அரை மணி நேரம் அவர் தொடர்ந்து உரையாற்றினார். இதுவரை அவர் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றியதற்கும், நேற்றைய உரைக்கும் நிறையவே வேறுபாடுகள் இருந்தன.

நீண்ட உரை
மார்ச் 19 தேதி, 24ம் தேதி, ஏப்ரல் மூன்றாம் தேதி, ஏப்ரல் 14ஆம் தேதி மற்றும் நேற்று மே 12ஆம் தேதி ஆகிய நாட்களில் மோடி உரையாற்றி இருந்தாலும், இதில் நேற்று தான் நீண்ட நேரம் அவர் உரையாற்றியுள்ளார். மிகக் குறைந்த நேரம் என்பது ஏப்ரல் 3ம் தேதி 11 நிமிடங்கள் 15 விநாடிகள் பேசியது ஆகும்.

ஹிந்தி டீச்சர்
வழக்கம்போல நேற்றும் அவர் ஹிந்தி மொழியில் தான் பேசினார் என்றாலும் கூட, அதில் தூய ஹிந்தி வார்த்தைகள் மற்றும் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் இருந்தன. எனவே, ஹிந்தி பேசும் மக்களுக்கு கூட, மோடி என்ன கூறுகிறார் என்பது முழுமையாக புரியவில்லை என்று தெரிகிறது. இது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலித்தது. தங்களது இந்தி ஆசிரியரை மோடி நினைவுபடுத்தியதாக பல நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இதோ அவர்கள் கருத்துக்களைப் பாருங்கள்.

தமிழர்கள்
மோடி பேச்சை கேட்டதும், தமிழர்கள் இப்படி ஒரு கணக்கு பார்முலாவை பார்த்தது போலத்தான் புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்கள் என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.

ஒரே உரையில் பல விஷயம்
ஒரே உரையில், மோடி, வரலாறு, தத்துவம், பொருளாதாரம், விநியோக சங்கிலி மேலாண்மை, இந்தி ஆகிய பாடங்களை நடத்திக் காட்டிவிட்டார் என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்

வசூல் ராஜா எம்பிபிஎஸ்
எல்லோருக்கும் ஹிந்தி தெரியாது. ஆங்கிலத்தில் பேசுங்கள் என கூறி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் ஹிந்தி வெர்ஷனான முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தில் இடம் பெறும், ஹாஸ்டல் ரூமை மாற்றுவதற்கான நடைமுறை என்ன என்ற அப்பாவி மாணவரின் கேள்வியை மீமாக்கியுள்ளார் இந்த பெண் நெட்டிசன்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications