உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் இறந்த கர்நாடக மாணவர்.. பெற்றோருக்கு போனில் பிரதமர் மோடி ஆறுதல்
டெல்லி: உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 6 நாட்களாக போரிட்டு வருகிறது. கட்டடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. தநைர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா முன்னேறி வருவதால் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் சொந்த ஊர், உடைமைகளை கைவிட்டுவிட்டு உயிர் பயத்தில் அண்டை நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.

கர்நாடக மாணவர் பலி
இந்நிலையில் இன்று காலை உக்ரைன் நாட்டின் 2வது மிகப்பெரிய நகரான கார்கிவ்வில் ரஷ்ய ராணுவம் /வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியாவை சேர்ந்த மாணவர் பலியானார். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சாலக்கேரி கிராமத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்பது தெரியவந்தது. உக்ரைனில் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த நிலையில் இன்று காலை மளிகை கடையில் வரிசையில் நின்றபோது ரஷ்யாவின் தாக்குதலில் குண்டு பாய்ந்து பலியானார்.

மோடி ஆறுதல்
நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடாவை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆறுதல் கூறினார். முன்னதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நவீனின் தந்தையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ‛‛இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. நவீனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். நவீனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன். தூதர அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்'' எனக்கூறினார். இதற்கிடையே நவீன் உயிரிழந்தை அறிந்து அவரது உறவினர்கள் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை
ஒவ்வொரு நிமிடமும் உக்ரைனின் நிலைமை மோசமாகி வருகிறது. கீவ் நகரில் நுழையும் நோக்கில் ரஷ்ய வீரர்கள் அதன் புறநகர் பகுதியை அடைந்துள்ளனர். இங்கு உக்ரைன் ராணுவமும் தயாராக உள்ளது. இதனால் இருதரப்புக்கும் மோதல் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் இந்தியா அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

மீட்பு பணி விரைவு
மேலும் ஆபரேஷன் கங்கா எனும் இந்தியாவின் மீட்பு நடவடிக்கையும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.மீட்பு பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட உள்ளது. இந்த விமானங்கள் தனியார் விமானங்களுடன் இணைந்து உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வர உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications