அனைத்து பருவ நிலைகளையும் எதிர்கொள்ள 109 வகை விதைகள்.. டெல்லியில் அறிமுகம் செய்த பிரதமர் மோடி!
டெல்லி: அனைத்து வகை தட்பவெப்ப நிலைக்கு உகந்த, சரியான மகசூல் தரக்கூடிய, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்கும் 109 விதைகளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் வெளியிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
வேளாண் உற்பத்தியை அதிகரித்தல்; உற்பத்தி செலவைக் குறைத்தல்; வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்குதல்; இயற்கை பேரிடர் இழப்புக்கு இழப்பீடு 5 - பாரம்பரிய பயிர்கள், பழங்கள், மலர்கள், மருத்துவம், தேனீ வளர்ப்பு, மதிப்புக் கூட்டுதல், மூலப்பொருட்களிலிருந்து மாறுபட்ட பொருட்களை தயாரித்தல்; இயற்கை விவசாயம் ஆகிய 6 பரிமாணங்களில் மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூபாய் 27 ஆயிரம் கோடியாக இருந்த வேளாண் பட்ஜெட், தற்போது அது தொடர்பான துறைகளையும் சேர்த்து ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், செலவைக் குறைக்கவும் விரும்பினால் நல்ல விதைகள் தேவை. பருவநிலை மாற்றம் காரணமாக, பூமியின் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. ஆகையால் தட்பவெப்ப நிலைக்கு உகந்த, சரியான மகசூல் தரக்கூடிய, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்கும் விதைகள் நமக்குத் தேவை. விதைகளை உற்பத்தி செய்வது, ஆராய்ச்சி செய்வதன் மூலம் விதைகளை உருவாக்குவது போன்ற பணிகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அண்மையில் இந்த நிறுவனமானது 109 வகையான விதைகளை தயாரித்துள்ளது. இதில் 23 வகையான தானியங்களின் விதைகள், 9 அரிசி விதைகள், 2 கோதுமை விதைகள் கோதுமை 2, 40 தோட்டக்கலை வகைகள் போன்றவை அடங்கும்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi interacts with the farmers and scientists as he releases 109 high-yielding, climate-resilient and biofortified varieties of crops at India Agricultural Research Institute. pic.twitter.com/mZiIgWfOx8
— ANI (@ANI) August 11, 2024
இந்த 109 பயிர் விதை வகைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் வெளியிட்டார். அப்போது இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகளுடனும் விவசாயிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications