புதிர் போட்ட புதின்.. மாஸ்கோவுக்கு போனை போடுங்க .. திடீரென பேசிய பிரதமர் மோடி!
டெல்லி: ஜி 20 மாநாடு டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இன்று (திங்கள்கிழமை) தொலைபேசியில் பேசினார். அவருடன் இன்று என்ன பேசினார் என்பதை இப்போது பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.இந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபன் புதினும் , சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியா தலைமையில் இந்த ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற போகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை இந்தியா செய்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஜி ஜின்பிங், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்பட பல உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆனால் உலக அரசியலை தீர்மானிக்க போகும், உலக நாட்டு தலைவர்கள் ஒன்றாக பங்கேற்கும் ஜி20 மாநாட்டில் , உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவரான உலக அளவில் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் திகழும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இன்று (திங்கள்கிழமை) தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்தார். ஆனால் அதிபர் புதினோ பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக கூறினாராம்.
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இன்று என்ன பேசினார் என்பது குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பல விஷயங்கள் குறித்து பேசினார்கள். ஜோகன்னஸ்பர்க்கில் சமீபத்தில் முடிவடைந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு குறித்து பேசினார்கள். இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர அக்கறையான விஷயங்கள் குறித்து பேசினார்கள் என்றும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியிடம் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இயலாத நிலை குறித்து புதின் எடுத்துரைத்தார் என்றும்,ரஷ்யா சார்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா கருத்தை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, ஜி 20 இல் இந்தியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் ரஷ்யா தந்து வரும் நிலையான ஆதரவிற்காக புதினுக்கு நன்றியும் தெரிவித்தார்.
உக்ரைன் போரில் சிறப்பு கவனம் செலுத்தி வரும் புதின், அதில் கவனம் செலுத்துவதே இப்போது முக்கிய பணியாக எடுத்துக்கொண்டுள்ளார் என புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோப் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications