பெரிய பிளான் போல.. குவாட் டூ ஜி7 வரை.. 6 நாட்களுக்கு வெளிநாடு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: மே 19ம் தேதி முதல் ஜப்பான், பப்புவா நியூ கினியா என 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி செல்கிறார். இந்த பயணத்தின்போது சில மாநாடுகளிலும் அவர் பங்கேற்கிறார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினராக இருக்கும் குவாட் மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. அதேபோல ஜி7 மாநாடும் நடைபெறுகிறது. எனவே இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை என 6 நாட்கள் பிரதமர் மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதில் குாவட் மாநாடு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் சமீப காலங்களாக சீனாவின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இதனை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அது சார்ந்த நிறுவனங்கள் இதனை விரும்பவில்லை. எனவே சீனாவில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகிறது. இதற்கு மாற்றாக ஆசியாவில் மற்றொரு சிறந்த நாட்டை நிறுவனங்கள் தேடி வருகின்றன. இப்படி சிதறும் முதலீடுகளை ஈர்க்க இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் இதற்கு குவாட் நாட்களின் ஆதரவு அவசியம். குறிப்பா அமெரிக்காவின் சப்போர்ட் இருந்தால்தான் இதனை சாதிக்க முடியும். எனவே இது தொடர்பாக இந்த குவாட் மாநாட்டில் விவாதிக்கப்படலாம். இதனால்தான் இந்த மாநாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதில் பங்கேற்கதான் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு செல்கிறார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடை பெறும் 'ஜி7' உச்சி மாநாட் டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் வருகிற 19ம் தேதி 3 நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார். அங்கு ஜி7
உச்சி மாநாட்டின்போது 'ஜி7' நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் பூமியின் நிலையான செழிப்பு போன்ற தலைப்புகளில் பிரதமர் மோடி பேசுவார். இது மட்டுமல்லாது இதே உணர்வோடு உணவு, உரம் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் அவர் உரையாற்றுவார். இம்மாநாட்டின்போது ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் பிதமர்களிடம் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.
இந்த மாநாட்டை முடித்துக்கொண்டு ஜப்பானிலிருந்து நேராக பப்புவா நியூ கினியா நாட்டிற்கு மோடி பயணிக்கிறார். அந்நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப்வேவுடன் இணைந்து, இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் 3வது உச்ச மாநாட்டை நடத்துகிறார். இந்த மாநாடு வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்றே்றுவிட்டு அன்று இரவே மோடி ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கிறார்.
அங்கு சிட்னியில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். இந்த மாநாடு ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு முடிந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி உரையாடுகிறார்" என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications