சாதியால் பயனடைபவர்கள்! கேந்திரிய வித்யாலயா முடிவை வரவேற்பவர்களை விமர்சித்த கார்த்தி சிதம்பரம்
டெல்லி: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை விமர்சிப்பவர்கள் சாதி, வர்க்கத்தால் பயனடைபவர்கள் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.
நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ராணுவ வீரர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் குழந்தைகள் அதிகளவில் பயின்று வருகின்றனர்.
மாணவர் சேர்க்கையில் அவர்களுக்கே முன்னுரிமையும் அளிக்கப்பட்டு வருகிறது.

எம்.பிக்கள் பரிந்துரை இடங்கள்
இதை தவிர்த்து சிறப்பு ஒதுக்கீடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 இடங்கள் வழங்கப்பட்டு வந்தன. அதன் மூலம் தங்கள் தொகுதிகளை சேர்ந்த 10 மாணவ மாணவிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்து வந்தனர். பெற்றோர்களும் எம்.பிக்களிடம் பரிந்துரை கடிதத்தை பெற்று தங்கள் பிள்ளைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்த்து வந்தனர்.

குற்றச்சாட்டுகள்
இதனை பயன்படுத்தி சில எம்.பிக்கள் பெற்றோரிடம் பணம் பெற்றுக்கொண்டு பரிந்துரை கடிதம் வழங்குவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில், எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள தடை விதிப்பதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

கார்த்தி சிதம்பரம் கண்டனம்
2022 - 2023 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேந்திரிய வித்யாலயாவின் இந்த அறிவிப்புக்கு சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
Recommended Video

சாதியால் பயனடைபவர்கள்
"ஒரு எம்.பியிடம் இருக்கும் சிறிதளவு தலையீட்டு அதிகாரங்களையும் பறிக்கும் நடவடிக்கை மூர்க்கத்தனமானது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் பரிந்துரைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருப்பதை வரவேற்கும் அனைவரும் சாதி, வர்க்கம் மற்றும் தொடர்புகளின் மூலமாக சிறப்பு உரிமை பெற்று பயனடைந்தவர்கள். அவர்கள் வாழ்வின் அடித்தளமே அதுவாகதான் உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications