அடி தூள்.. முதல் பேட்டியே அசத்தல்.. வைரலாகும் பிரியங்கா காந்தியின் பேட்டி! - வீடியோ
தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் பிரியங்கா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் பதில் அளித்த விதம் பெரிய வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் உ.பி பொதுச்செயலாளராக தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் பிரியங்கா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் பதில் அளித்த விதம் பெரிய வைரல் ஆகியுள்ளது.
உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு இதனால் புதிய பலம் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

என்ன பேட்டி
இந்த நிலையில் பிரியங்கா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் பதில் அளித்த விதம் பெரிய வைரல் ஆகியுள்ளது. செய்தியாளர் ஒருவர் அவரிடம் ''பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி உங்களை விமர்சித்து வருகிறாரே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டுள்ளார். இதற்கு பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டே ''ஹான்.. யார் அது?'' என்று கேட்டு இருக்கிறார்.
|
பதில் வைரல்
இவரின் இந்த பதில் பெரிய வைரலாகி உள்ளது. அட, இவ்வளவு அசால்ட்டா பதில் சொல்லிட்டு போயிட்டாங்களே, என்று எல்லோரும் இவரை பாராட்டி வருகிறார்கள். முக்கியமாக பதில் சொல்லிவிட்டு கேலியாக சிரித்ததும் வைரலாகி உள்ளது.
|
பதில் அளித்துள்ளார்
இதற்கு தற்போது மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி பதில் அளித்துள்ளார். அதில், இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. உங்கள் குடும்பம் செய்த ஊழலையே நீங்கள் மறந்துவிடுகிறீர்கள், என்னுடைய பெயர் எல்லாம் எப்படி ஞாபகம் இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
|
இனிதான்
இவர், இதுதான் பிரியங்கா காந்தி.. இனிதான் ஆட்டம் இருக்கிறது.. தரமான சிறப்பான சம்பவங்கள் இனிதான் வரும் என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications