டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என்றைக்காவது ஒரு நாள்..." கர்நாடக ஆட்சி கவிழ்ப்புக்கு பின்.. பாஜகவுக்கு பிரியங்கா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்க முடியும் என்பது பாஜகவுக்கு ஒரு நாள் புரிய வரும் என உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு முதல் மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் அமைச்சர் பதவி, முக்கிய இலாகா ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

 Priyanka Gandhi says that One day BJP will discover

இந்த நிலையில் கடும் இழுபறிக்கு பிறகு நேற்றைய தினம் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 99 வாக்குகள் மட்டுமே ஆளும் கட்சிக்கு ஆதரவாக கிடைத்ததால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

கர்நாடகா சரித்திரத்தில் 5 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தது 3 பேர் மட்டும்தான்! கர்நாடகா சரித்திரத்தில் 5 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தது 3 பேர் மட்டும்தான்!

அதாவது இத்தனை நாட்களாக குமாரசாமிக்கு ஆதரவளித்து வந்த இரு சுயேச்சைகள் உள்பட 18 எம்எல்ஏக்கள் பாஜக முகாமுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் பாஜக தனது மெஜாரிட்டியை நிரூபித்துள்ளதால் எடியூரப்பா மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்புக்கு பாஜகவின் குதிரை பேர அரசியலே காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்கிற உண்மையை பாஜக ஒரு நாள் உணரும்.

அவர்களின் அனைத்து பொய்களும் ஒரு நாள் வெளிச்சதுக்கு வரும். அதுவரை இந்நாட்டின் குடிமக்கள் அவர்களின் ஊழல்களை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என அனுப்பியுள்ளார். இந்த நிலையில் ராகுல்காந்தியோ ஜனநாயகம், நேர்மை மற்றும் கர்நாடகத்தில் மக்கள் இன்று தோற்றுவிட்டனர்.

English summary
Priyanka Gandhi says that One day the BJP will discover that everything cannot be bought, everyone cannot be bullied and every lie is eventually exposed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X