மீண்டும் கலவர பூமியாகும் மணிப்பூர்? பிரதமரை சரமாரியாக விளாசிய பிரியங்கா காந்தி.. என்ன சொன்னார்
டெல்லி: மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸின் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் புத்தாண்டு தினத்தில் மீண்டும் வன்முறைச் சம்பவம் நடந்தது. அங்கே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மணிப்பூர் பள்ளத்தாக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத மர்ம கும்பல் மிரட்டி பணம் பறிக்க வந்ததே இந்த வன்முறைக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
வன்முறை வெடிக்குமா: இது மணிப்பூர் தௌபால் மாவட்டத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் லிலாங் சிங்ஜாவ் பகுதியில் நடந்துள்ளது. இதனால் அங்கே மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. எங்கே மீண்டும் மாநிலம் முழுக்க வன்முறை வெடிக்குமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
பிரியங்கா காந்தி: இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், "மணிப்பூரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர், பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர்.. மணிப்பூர் மக்கள் எட்டு மாதங்களாகக் கொலை, வன்முறை மற்றும் அழிவை எதிர்கொண்டு வருகின்றனர். இவை எப்போது தான் நிறுத்தப்படும்?
மணிப்பூரில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டுக் குழு டெல்லி வந்து பிரதமரைச் சந்திக்க நேரம் கோரியது. ஆனால் இன்று வரை பிரதமர் நேரம் கொடுக்கவில்லை.. பிரதமர் மோடி இதுநாள் வரை மணிப்பூருக்குச் செல்லவில்லை, மணிப்பூர் பற்றிப் பேசவில்லை, நாடாளுமன்றத்திலும் பதில் சொல்லவில்லை, அமைதியைக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணிப்பூருக்குத் தேவையான தலைமை இதுதானா? அல்லது பிரமாண்டமாக விளம்பரங்கள் போதுமா இதை மறக்கடிக்க?
நடவடிக்கை தேவை: அரசு இனியும் தாமதமின்றி மணிப்பூரில் உள்ள அனைத்து தரப்பினர் உடனும் பேசி, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அமைதியைக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்கத் தொடங்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி 'பாரத் நியாய யாத்ரா' என்ற யாத்திரையை நடத்துகிறது. யாத்திரை தொடங்க சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மீண்டும் அங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை பல மாதங்கள் நீட்டித்தது. இந்த இனக் கலவரத்தில் 180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பல நூறு பேர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் நேரடியாக உச்ச நீதிமன்றமே தலையிட வேண்டி இருந்தது. அதன் பின்னரே மணிப்பூரில் மெல்ல அமைதி திரும்பியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications