கொடூரமானது.. உயிர் காக்கும் மருந்துவ பொருட்களுக்கு ஜிஎஸ்டி.. பிரியங்கா காந்தி வெளியிட்ட லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி கொரோனா தொற்று நோய் மோசமாக பரவும் போது ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ பொருட்களுககு ஜிஎஸ்டி போடுவது கொடூரமானது. மனித தன்மையற்ற செயலும் கூட என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார.

இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கோவிட்டை எதிர்த்துப் போராடப் பயன்படும் அனைத்து உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்களிலிருந்து ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அகற்ற வேண்டும் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

உயிர் காக்கும் அத்தியாவசிய மருத்துவ தயாரிப்புகளுக்கு போடப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து பட்டியலையும் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார்.

சோப்புகளுக்கு 18% வரி

சோப்புகளுக்கு 18% வரி

ஆல்கஹால் கலந்த சானிடைசருக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. கைகளை கழுவும் சோப்பு நீர், சோப்புகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை உறைகளுக்கு 13 சதவீதம்வரியும், கிருமிநாசினிகளுக்கு 18 சதவீதம் வரியும், தெர்மா மீட்டருக்கு18 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது

ஆக்சிஜன் செறிவூட்டி

ஆக்சிஜன் செறிவூட்டி

வெண்டிலேட்டர்களுக்கு 12 சதவீதமும், தனிநபர்கள் பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவீதம் (முன்பு 28 சதவீதம்) வரி போடப்படுகிறது. மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு 12 சதவீதமும், ரெம்டெசிவிர் உள்ளிட்ட கோவிட் மருந்துகளுக்கு 12 சதவீதமும் வரி போடப்படுகிறது.

தடுப்பூசி

தடுப்பூசி

பரிசோதனை கருவிகளுக்கு 12 சதவீதமும், பிபிஇ கிட்டுக்கு 12 சதவீதமும், காட்டன் அல்லாத முககவசங்களுக்கு 12 சதவீதமும் வரி போடப்படுகிறது. தடுப்பூசிகளுக்கு 5 சதவீதமும். காட்டன் முககவசத்திற்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. கவுன்சில்

ஜி.எஸ்.டி. கவுன்சில்

இதனிடையே ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 . 8 மாதங்களுக்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. இது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 43-வது கூட்டம் ஆகும். டெல்லியில் இருந்தவாறு நிர்மலா சீதாராமன் காணொலிக்காட்சி வழியாக இந்த கூட்டத்தை தொடங்கினார்.. இதில் நிதித்துறை இணையமைச்ர் அனுராக் தாக்குர், மாநில நிதியமைச்சர் , மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் இந்த கூட்டத்தில் வரிகள் குறைப்பு குறித்து முடிவெடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+