அகமதாபாத் விமான விபத்து! விசாரணையை 3 மாதங்களில் முடிக்க.. விமான போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவு!
டெல்லி: 270 உயிர்களை பலி கொண்ட அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டிருப்பதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்திருக்கிறார்.
விபத்து தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த அவர், "50 அடி உயரத்தை எட்டியதும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. விமானம் புறப்பட்ட 6, 7 நிமிடங்களுக்குள்ளேயே பிரச்சினை ஏற்பட்டு விபத்தில் சிக்கியுள்ளது. விபத்து தொடர்பான உயர்மட்டக் குழுவின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் சமீர் குமார் சின்ஹா கூறுகையில், "ஜூன் 12-ம் தேதி மதியம் 2 மணியளவில், அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் ஏடிசி மூலம் இதுகுறித்த விரிவான தகவல்களை நாங்கள் பெற்றோம். ஏஐசி 171 என பெயரிடப்பட்ட இந்த விமானத்தில், 230 பயணிகள், 2 விமானிகள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.
இந்த விமானம் மதியம் 1:39 மணிக்கு புறப்பட்டது. சில நொடிகளில், சுமார் 650 அடி உயரத்தை எட்டியது. அதன் பின்னர் கீழே விழ தொடங்கியது. 1:39 மணிக்கு விமானி, அகமதாபாத் விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டாடு, 'மே டே' என்கிற அவசர குறியீட்டை தெரிவித்தார். பதிலுக்கு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விமானியை தொடர்புகொள்ள முயன்றபோது எந்த பதிலும் கிடைக்கிவில்லை. சரியாக 1 நிமிடம் கழித்து விமானம், விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ள மேதானி நகரில் விழுந்து விபத்தில் சிக்கியது.
விபத்துக்கு முன்பு, இந்த விமானம் பாரிஸ்-டெல்லி-அகமதாபாத் வழித்தடத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாகப் பறந்தது. விபத்து காரணமாக, அகமதாபாத் விமான நிலைய ஓடுபாதை மதியம் 2:30 மணிக்கு மூடப்பட்டது. அனைத்து விதிமுறைகளும் முடிந்தபின், ஓடுபாதை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் வழக்கம்போல விமானங்கள் இயக்கப்பட்டன.
விபத்தில் மொத்தம் 270 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன" என்று கூறியுள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications