அடப்பாவமே.. மாம்பழத்தை இழக்கும் பாமக! புதுச்சேரியில் மாநில கட்சி அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையம்
டெல்லி: புதுச்சேரியில் பாமகவின் மாநில கட்சி அந்தஸ்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்து இருக்கிறது. மாநில அந்தஸ்தை பெறுவதற்கான வாக்கு வங்கியை அக்கட்சி பெறாத காரணத்தால் அந்த தகுதியை இழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பல கட்சிகளின் தேசிய அந்தஸ்தும் பறிபோய் இருக்கிறது.
மாநில அந்தஸ்து மற்றும் தேசிய அந்தஸ்து பெறும் கட்சிகள் மற்றும் அந்த தகுதியை இழக்கும் கட்சிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கும் சில கட்சிகளை பார்த்து ஆச்சரியமும், சில கட்சிகளை கண்டு அதிர்ச்சியும் ஏற்படுகிறது. தேசிய அளவில் ஆளுமை செலுத்திய பல கட்சிகள் அந்த அந்தஸ்தை இழந்து இருக்கின்றன.

அந்த வகையில் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி வைத்து இருந்த மாநில கட்சி அந்தஸ்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பறித்து இருக்கிறது. அம்மாநிலத்தில் மாநில கட்சிக்கான வாக்கு விகிதத்தை அக்கட்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் பாமக தேர்தலில் போட்டியிடும்போது அதன் வேட்பாளர்களுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்படுவது கடினம். இதேபோன்று உத்தரப்பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பிஆர்எஸ், மணிப்பூரில் பிடிஏ, மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.பி, மிசோரத்தில் எம்பிசி ஆகிய கட்சிகள் மாநில அந்தஸ்தை இழந்து உள்ளன.
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது. டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் ஆம் ஆத்மியின் செயல்பாடுகளை வைத்து அதற்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கி இருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். குறிப்பாக டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றியை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து உள்ளது ஆம் ஆத்மி கட்சி.

அதே நேரம் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்று இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது அந்த அந்தஸ்தை இழந்து இருக்கின்றன. இந்தியாவின் அனைத்து தொகுதிகளிலும் கிளைகளை பரப்பி உள்ள, பழமையான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்து இருக்கிறது. தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெறுவதற்கு, 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கட்சியை நடத்த வேண்டும். அல்லது மக்களவையில் 2 சதவீத சீட்டுகளை பெற்று இருக்கும் கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெறும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவில் தற்போது 6 தேசிய கட்சிகளே உள்ளன. பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சிகளுடன் ஆம் ஆத்மி கட்சி இந்த வரிசையில் இணைந்து உள்ளது. ஒரு கட்சி தேசிய கட்சி அந்தஸ்தை இழப்பதால் நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிடும்போது அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவான சின்னம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications