நீங்கல்லாம் பத்திரிக்கையாளர்னு நடிக்காதீங்க.. பிரஸ்மீட்டில் விளாசி தள்ளிய ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தகுதிநீக்கத்துக்கு பிறகு இன்று டெல்லியில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கேள்வி கேட்ட பத்திரிகையாளரை பார்த்து, ‛‛ஏன் பாஜகவுக்கு ஆதரவா கேள்வி கேட்கிறீங்க.. மார்பில் பாஜகவின் கொடியை பொறித்து வைத்து கொண்டு வந்து கேள்வி கேளுங்க. பத்திரியைாளராக நடிக்காதீங்க'' என காட்டமாக விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி ராகுல் காந்தியிடம் என்ன கேள்வி கேட்கப்பட்டது?

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கர்நாடகா மாநிலம் கோலாரில் ‛மோடி' பெயர் குறித்து பேசியது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

2 ஆண்டு சிறை தண்டனை

2 ஆண்டு சிறை தண்டனை

மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதையடுத்து அடுத்த 24 மணிநேரத்துக்குள் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதன்மூலம் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் ராகுல் காந்தியை எதிர்கொள்ள பாஜக பயப்படுவதால் தான் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

இந்நிலையில் தான் டெல்லியில் இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்ய காரணமாக இருந்த மோடி பெயர் சர்ச்சை தொடர்பான வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்தும், ஓபிசி பிரிவு மக்களை அவமதித்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டுவது பற்றியும் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை கேட்ட ராகுல் காந்தி கடும் கோபம் அடைந்தார். இருப்பினும் அவர் அந்த கேள்வியை புறக்கணிக்காமல் ஆக்ரோஷமாக பதிலளித்தார்.

 ராகுல் சொன்னது என்ன?

ராகுல் சொன்னது என்ன?


இதுபற்றி ராகுல் காந்தி கூறுகையில், ‛‛ஏன் பாஜகவுக்கு நேரடியாக வேலை செய்கிறீர்கள். இதனை வெளிப்படையாக கூட நீங்கள் செய்யலாம். அதாவது நீங்கள் பாஜகவுக்கு பணியாற்ற விரும்பினால் உங்கள் மார்பில் அந்த கட்சியின் கொடியின் சின்னத்தை வைத்து கொண்டு வந்து கேள்வி கேளுங்கள். அப்போதும் இப்போது நான் உங்களுக்கு பதில் அளிப்பேன்.பத்திரிகையாளர் போல் நடிக்க வேண்டாம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+