"டேஞ்சரஸ் லெவல்".. இந்தியாவை கடுமையாக தாக்கிய கத்தார் அமைச்சர்.. பார்த்தீங்களா! இப்படி சொல்லிட்டாரே!
டெல்லி: கத்தாரின் இணை வெளியுறவுத்துறை அமைச்சர் லோல்வா அல்ஹதீர் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
இஸ்லாமிய இறை தூதுவர் நபிகளை இகழ்ந்து பேசிய நிலையில் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது நுபுர் சர்மா சில தவறான வார்த்தைகளை பயன்படுத்தி நபிகளை இகழ்ந்து பேசினார்.
தேசிய கட்சியை சேர்ந்த ஒருவர், அதுவும் ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் இப்படி பொது இடத்தில் ஒரு மதத்தின் இறை தூதுவரை பற்றி பேசியது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

நீக்கம்
இந்த நிலையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் சார்பாக போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் 40 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இன்னொரு பக்கம் நுபுர் சர்மா கருத்துக்கு கத்தார், குவைத், ஈரான் போன்ற நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று கத்தாரில் இஸ்லாமியர்கள் போராட்டம் செய்ய தொடங்கினார்கள். இதையடுத்து பாஜகவில் இருந்து நுபுர் சர்மா, நபிகளுக்கு எதிராக ட்விட் செய்த நவீன் ஜிண்டால் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

விளக்கம் கேட்டு சம்மன்
இன்னொரு பக்கம், கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மீட்டலிடம் கத்தார் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு கத்தார் வெளியுறவுத்துறை அளித்த சம்மனில், இஸ்லாமியர்களை கோபம் அடைய செய்யும் வகையில் கருத்து தெரிவித்த உறுப்பினரை ஆளும் இந்திய அரசு நீக்கியதை வரவேற்கிறோம். அதே சமயம், இந்திய அரசாங்கம் , சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடி கண்டனத்தை வெளியிட வேண்டும், என்று விளக்கம் கேட்கப்பட்டது.

இந்தியா விளக்கம்
இந்த நிலையில்தான் கத்தாரின் சம்மனுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தது தனி நபர்கள்தான். இந்த கருத்துக்கள் எதுவும், எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்கள் கிடையாது. இவை கழகத்தை ஏற்படுத்தும் (fringe element) நபர்களின் கருத்துக்கள்தான். இந்தியா அனைத்து மதங்களையும் மதிக்கிறது. ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது என்று விளக்கம் அளித்தது.

இஸ்லாமிய நாடுகள்
இந்தியா சார்பாக அதிகார்பூர்வ மன்னிப்பு கேட்கப்பட்ட நிலையில், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் பலர் இந்தியாவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடிக்கு எதிராக முக்கியமாக #إلا_رسول_الله_يا_مودي என்ற டேக் வைரலாகி வந்தது. எங்கள் கடவுளின் தூதுவரை விமர்சனம் செய்யாதீர்கள் மோடி என்று பொருள்படும் வகையில் இந்த டேக்கை அவர்கள் டிரெண்ட் செய்து வந்தனர். மோடியை விமர்சனம் செய்யும் வகையில் ஈரான், கத்தார்., குவைத் மக்கள் இதில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

கத்தார்
இதில் கத்தாரின் இணை வெளியுறவுத்துறை அமைச்சர் லோல்வா அல்ஹதீர் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, சமத்துவத்திற்கு பெயர் போன ஒரு நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடுகள் மிக மோசமான, அபாயகரமான நிலையை அடைந்து உள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்பாடுகள், அவர்களை குறி வைக்கும் வெறுப்பு பேச்சுக்கள் ஆகியவற்றை அதிகாரபூர்வமாக., அமைப்பு ரீதியாக நாம் எதிர்க்க வேண்டும். இல்லை என்றால் அது 2 பில்லியன் இஸ்லாமியர்களை நாம் அவமானப்படுத்தியது போல ஆகிவிடும், என்று












Click it and Unblock the Notifications