நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேளுங்கள்.. இந்தியாவுக்கு குவைத் அரசு கண்டனம்
டெல்லி: பாஜக தலைவர்கள், நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்தை பேசியதாக இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பிய நிலையில் குவைத், ஈரான் ஆகிய நாடுகளும் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குவைத் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வந்தவர் நுபுர் சர்மா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஞானவாபி வழக்கு குறித்து விவாதத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் மோசமான கருத்துகளை நுபுர் சர்மா தெரிவித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

டெல்லி பாஜக
இந்த நிலையில் டெல்லி பாஜக ஊடக பொறுப்பாளர் நவீன் ஜிந்தால் தனது ட்விட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார். ஜிந்தாலையும் சமூகவலைதளவாசிகள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து நுபுர் சர்மாவுக்கு எதிராக மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மகாராஷ்டிரா காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நுபுர் சர்மா
இதையடுத்து நுபுர் சர்மாவையும் நவீன் ஜிந்தாலையும் பாஜக கட்சியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து காரணமாக இந்தியா தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கத்தார் இந்திய தூதர் தீபக் மித்தலுக்கு சம்மன் அனுப்பியது.

தீபக் மித்தல்
அப்போது கத்தார் அரசு, தீபக் மித்தலிடம் கூறுகையில் இத்தகைய இஸ்லாமிய சமூகத்தின் மீது வெறுப்பை உமிழும் கருத்துகளை கூறுவோருக்கு தண்டனை ஏதும் வழங்காதது மனித உரிமைகளின் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இது வன்முறை மற்றும் வெறுப்பை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.

கத்தார், ஈரான், குவைத் கண்டனம்
கத்தாரை தொடர்ந்து குவைத், ஈரான் ஆகிய நாடுகளும் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. "வெறுப்பு பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தீவிரவாதம், வெறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் மிதவாதத்தின் கருத்துகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் தண்டனை கொடுக்க வேண்டும்" என குவைத் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அது போல் ஈரானும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. கத்தார் பிரதமர் ஷேக் காலித் பின் கலீபா பின் அப்துல் அஜீஸ் அல் தானியை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்திருந்த நிலையில் கத்தார் இத்தகைய கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications