Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவாட் அமைப்பு உச்சி மாநாடு: மோடி-ஜோ பைடன் உள்பட 4 நாட்டு தலைவர்கள் முக்கிய ஆலோசனை

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து மிகத் தீவிரம் அடைந்துள்ள நிலையில் குவாட் அமைப்பு உச்சி மாநாடு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்து மிகத் தீவிரம் அடைந்துள்ள நிலையில் குவாட் அமைப்பு உச்சி மாநாடு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது.

Quad Leaders Virtual Meet Today: Key advice from 4 heads of Country including Modi-Joe Biden

குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
2வது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு இன்று காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்றையக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. குவாட் நாடுகளில் 3 நாடுகள் ரஷ்யா எதிர்ப்பில் தீவிரமாக உள்ளன. அதேசமயம் இந்தியா எந்த பக்கமும் சாராமல் நடுநிலையில் உள்ளது.

இந்தியாவை நிர்பந்திக்க அமெரிக்கா இன்றையக் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ரஷ்யா நாட்டின் மீது மட்டுமல்லாமல் அதிபர் புடின் மீதும் பொருளாதாரத் தடைகளை கொண்டு வருவதில் அமெரிக்கா முனைப்பு காட்டுகிறது.

சர்வதேச சமூகத்தை அந்த வழியில் வழிநடத்தவும் அமெரிக்கா முயலுகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் உக்ரைனுக்கு எதிராக ஒரு எதிர்மறையான நிலைப்பாட்டை முன்வைப்பதால் இந்தியாவுக்கு மறைமுகமாக நெருக்கடி ஏற்படலாம் எனத் தெரிகிறது.

உக்ரைன் விவகாரம் மட்டுமின்றி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டிற்குப் பிறகு தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்கள் பற்றியும் பேசவுள்ளனர்.

இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், பருவநிலை மாற்றம், கல்வி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+