ரபேல் டீலில் திடுக்கிடும் குளறுபடி.. மத்திய பாஜக அரசு செய்த தவறால் இத்தனை கோடி இழப்பா?
ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வங்கி உத்தரவாதமும் அளிக்கவில்லை.
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்தவிதமான வங்கி உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதனால் ரபேல் ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டதை விட இந்தியாவிற்கு அதிக செலவு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தி இந்து நாளிதழ் நிறைய கட்டுரைகளை, ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது. தி இந்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் இன்று ரபேல் தொடர்பாக முக்கிய ஆதாரங்களுடன் கூடிய கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பாஜக அரசு மூலம் செய்யப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது. மிக முக்கியமாக இந்த ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு தரப்பிற்கு எந்த விதமான உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.

மூன்று ஒப்பந்தங்கள்
பொதுவாக ராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்படும் போது மூன்று விதமான உத்தரவாதம் அளிக்கப்படும். ஒப்பந்தத்தின்படி ஒரே தரத்தில் அனைத்து பொருட்களும் அளிக்கப்படும், வங்கி பரிவர்த்தனை உத்தரவாதம், பொருட்களை சரியாக டெலிவரி செய்யும் உத்தரவாதம், ஆகிய மூன்றும் அளிக்கப்படும்.

வங்கி வாக்குறுதி
ஆனால் இந்த ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய தரப்பிற்கு வங்கி உத்தரவாதம் பிரான்ஸ் தரப்பு அளிக்கவில்லை. பொதுவாக பெரிய ஒப்பந்தங்கள் செய்யப்படும் சமயங்களில் இது போன்ற வங்கி உத்தரவாதம் அளிக்கப்படும். ஆனால் இந்த ரபேல் ஒப்பந்தத்தில் அப்படி எந்த விதமான உத்தரவாதங்களும் அளிக்கப்படவில்லை.

என்ன காரணம்
முதலில் இந்த ஒப்பந்தத்தை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐஎன்டி என்று அழைக்கப்படும் Indian Negotiating Team (பேரம் பேசும் குழு) குழு பிரான்ஸ் தரப்பிடம் வங்கி உத்தரவாதங்களை கேட்டு இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி மூலம் பிரான்ஸ் அரசுடன் தனியாக இன்னொரு பேரமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தனிப்பட்ட பேரம் காரணமாக கடைசியில் ஒப்பந்தமானது வங்கி உத்தரவாதம் இல்லாமலே செய்யப்பட்டு உள்ளது.

பிரச்சனை என்ன
இப்படி வங்கி உத்தரவாதம் இல்லாமல் செய்யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக இந்தியாவிற்கு பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. வங்கி உத்தரவாதம் அளிக்கும்போது, குறிப்பிடப்பட்ட தொகை ஒவ்வொரு விமானங்களுக்கு குறையும். ஒப்பந்த விலையை விட குறைந்த விலையில் இந்தியா விமானத்தை வாங்கி இருக்க முடியும். ஆனால் இந்தியா இந்த வங்கி உத்தரவாதத்தை பெறாமல் போய்விட்டது.

சிஏஜியில் இல்லை
சிஏஜி அறிக்கையில் இந்திய தரப்பு வங்கி உத்தரவாதத்தை பெறவில்லை என்று கூறி இருக்கிறது. ஆனால் இந்த வங்கி உத்தரவாதத்தால் குறையும் தொகையை சிஏஜி அறிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த தொகையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலே பாஜக அரசின் ஒப்பந்தமானது 2.86% காங்கிரஸ் ஒப்பந்தத்தை விட விலை குறைந்தது என்று சிஏஜி தவறான அறிக்கையை அளித்து இருக்கிறது.

எவ்வளவு தெரியுமா?
சிஏஜி அறிக்கையின்படி ஒரு விமானத்திற்கு வங்கி வாக்குறுதி மூலம் 574 மில்லியன் யூரோ விலை குறையும். இந்திய மதிப்பில் இது பல கோடிகளை தாண்டும். ஆனால் இந்த குறையும் விலையை சிஏஜி கணக்கில் எடுக்கவில்லை. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையிலும் இதை அப்படியே மறைத்து இருக்கிறது.

அதிகம் ஏறியது
இதனால் மொத்த ஒப்பந்தத்தில் ஒவ்வொரு விமானங்களுக்கும் இந்தியா 574 மில்லியன் யூரோ அதிகம் கொடுத்து இருக்கிறது மத்திய அரசு. இது இல்லாமல் வேறு சில இடங்களிலும் விமான விலை இந்த புதிய ஒப்பந்தத்தில் உயர்த்தப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த ஒப்பந்தம் எந்த வகையிலும் காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை விட குறைவான விலையில் செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

என்ன மாதிரியான பிரச்சனை
இதனால் மத்திய அரசுக்கு வேறு சில நிறைய பிரச்சனைகள் ஏற்படும். இந்தியாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, பின் பிரான்ஸ் விமானத்தை அளிக்காமல் ஏமாற்றலாம். விமானத்தின் விலையை பிரான்ஸ் நினைக்கும் போது உயர்த்தலாம். தரமற்ற விமானங்களை அளிக்க விரும்பினால் அளிக்கலாம். விமானத்தை டெலிவரி செய்வதில் காலதாமதம் செய்யலாம். இதனால், இந்த ஒப்பந்தம் மூலம் ரபேல் விமானம் இந்தியாவிற்கு கிடைக்காமல் கூட போகலாம், என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications