டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி முறைகேடாக பேரம் பேசியுள்ளார்.. ரபேல் ஆவணங்களை காட்டி பரபரப்பை ஏற்படுத்திய ராகுல்!

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி முறைகேடாக பேரம் பேசியுள்ளார் என்று ரபேல் ஆவணங்களை காட்டி ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி முறைகேடாக பேரம் பேசியுள்ளார் என்று ரபேல் ஆவணங்களை காட்டி ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

ரபேல் ஊழல் விவகாரம் தற்போது மீண்டும் பெரிய பிரச்சனையாகி இருக்கிறது. ரபேல் ஊழல் தொடர்பான விசாரணைக்கு கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி இதுவரை 5 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் அந்த பரபர ஆவணம் வெளியாகி உள்ளது.

என்ன ஆவணம்

என்ன ஆவணம்

இன்று காலை ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் மத்திய பாதுகாப்பு துறையில் செயலாளராக இருந்த மோகன் குமார் என்பவரின் ஆவணம் ஒன்று வெளியானது. அதில் பிரதமர் மோடி, ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, தனியாக ரபேல் தொடர்பான பேரத்தை மறைமுகமாக நடத்தினார். வேறு சிலர் பயன் அடைய வேண்டும் என்று தனி பேரத்தை பேசினார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

ராகுல் பேட்டி

ராகுல் பேட்டி

மோடி வேண்டும் என்றே, ரபேல் ஒப்பந்தத்தை மட்டுப்படுத்தும் அளவிற்கு இதை செய்தார். இதனால்தான் எச்ஏஎல்லிடம் இருந்து ஒப்பந்தம் கைமாறியது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

ரபேலில் மோடி முறைகேடான பேரத்தை நடத்தி இருக்கிறார். சிலர் ஆதாயம் பெறுவதற்காக மோடி தனிப்பட்ட பேர பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கடிதம் இதை நிரூபிக்கிறது. ரபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவின் அதிகாரத்தை பேரம் மூலம் மோடி மட்டுப்படுத்தி இருக்கிறார்

முதல்முறை

முதல்முறை

இந்தியாவில் முதல்முறை ஒரு பிரதமர் பேரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதுவரை யாரும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது கிடையாது. எந்த பிரதமரும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அழிக்கும் வகையில் தனியாக வேறு ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்தது கிடையாது. ஆனால் அதை மோடி செய்துள்ளார்.

திருடிவிட்டார்

திருடிவிட்டார்

மோடி ரூ.30000 கோடியை திருடி இருக்கிறார். அந்த பணத்தை அவர் அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளார். இதைத்தான் ஒரு வருடமாக நான் கஷ்டப்பட்டு கூறி வருகிறேன். இப்போது அதை நிரூபிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு துறையின் கடிதம் வெளியாகி உள்ளது.

English summary
Rafale Deal: PM Modi did Parallel negotiations with France says, Rahul Gandhi on Pressmeet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X