இது மோடிக்கு கிடைத்த வெற்றி.. ரபேல் தீர்ப்பிற்கு வரும் தலைவர்களின் கருத்துக்களை பாருங்க!
ரபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சித்தலைவர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில் , ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது. இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவைில்லை, இதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

டி ராஜா விசாரணை
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா பேட்டியளித்துள்ளார். அதில், இந்தியாவில் நாடாளுமன்றத்திற்குத்தான் உச்ச அதிகாரம் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரபேல் பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும். நாடாளுமன்றக்கூட்டுக்குழு இதை விசாரிக்க வேண்டும் என்றுள்ளார்.

ராஜ்நாத் சிங் என்ன சொல்கிறார்
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ''இது ஒப்பந்தம் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக இருக்கிறது. நாங்கள் அதைத்தான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். காங்கிரஸ் வைத்து குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இது மோடிக்கு கிடைத்த வெற்றி. காங்கிரஸ் அரசியல் லாபத்திற்காக குற்றச்சாட்டு வைக்கிறது என்றுள்ளார்.

பிரஷாந்த் பூஷன் கருத்து
மத்திய அரசுக்கு எதிரான மனுதாரர்களுள் ஒருவரான பிரஷாந்த் பூஷன் இதுகுறித்து தெரிவித்த கருத்தில் ''இந்த தீர்ப்பு தவறானது. நாங்கள் விசாரணை மட்டுமே கேட்டோம். அதை கூட நீதிமன்றம் ஏன் கேட்கவில்லை, இது சரியான முடிவாக இருக்காது. இதை விசாரித்தே ஆக வேண்டும்'' என்றுள்ளார்.

ரவிசங்கர் பிரசாத் கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ''சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மொத்த ஒப்பந்தமும் மிகவும் சரியான முறையில் செய்யப்பட்டது. ரபேலுக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரம் எல்லாம் பொய்யானது. ரபேலுக்கு எதிரான பிரச்சாரம் உடனே நிறுத்தப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications