டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க காசு கொடுப்போம்.. ஆனா அவங்க ஜெட் கொடுக்கணும்னு கட்டாயமில்ல.. அதிர வைத்த ரபேல் ஒப்பந்த ஓட்டை!

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மிக முக்கியமான உண்மை ஒன்றை நேற்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் ஒப்பந்தத்தில் இருக்கும் குழப்பம் ! அரசின் விளக்கம் இதுதான்- வீடியோ

    டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மிக முக்கியமான உண்மை ஒன்றை நேற்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.

    ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் மத்திய அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள்.

    ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.

    [ரஃபேல் ஒப்பந்தம் அரசுகளுக்கு நடுவே நடந்ததே கிடையாது.. ஒரே போடாக போட்ட கபில் சிபல்]

    கேள்வி கேட்டார்

    கேள்வி கேட்டார்

    இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் மனு தாரர் பிரஷாந்த் பூஷன் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் ''மத்திய அரசு செய்திருக்கும் ரபேல் ஒப்பந்தத்தில் பெரிய ஓட்டை இருக்கிறது. இதில் விமானங்களை அளிக்க வேண்டிய டாஸால்ட் நிறுவனம், விமானத்தை கட்டாயமாக அளிக்க வேண்டும் என்று எங்கும் கூறவில்லை. அவர்கள் ஏமாற்றிவிட்டால் மத்திய அரசு என்ன செய்யும்'' என்று கேள்வி எழுப்பினார்.

    மிக மோசமான பதில்

    மிக மோசமான பதில்

    இதற்கு பதில் அளித்த மத்திய அரசு ''நாங்கள் ஒப்பந்தத்தில் விமானங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று எங்குமே குறிப்பிடவில்லை. ஒப்பந்தத்தின் அடிப்படையில் எந்த இடத்திலும் நாங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் கண்டிப்பாக விமானத்தை அளிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை'' என்று மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய பதிலை மத்திய அரசு அசால்ட்டாக கூறியது.

    கோபம் கொண்டனர்

    கோபம் கொண்டனர்

    இதனால் கோபம் கொண்ட நீதிபதிகள், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையில் இப்படியா பதில் அளிப்பது. அந்த டாஸால்ட் நிறுவனம்,பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டால் என்ன செய்வீர்கள். விமானம் இல்லை, ராணுவம் வலிமையாக இல்லை என்று கூறிவிட்டு அதை வலிமையாக்க செய்த ஒப்பந்தத்தை இப்படியா மோசமாக வடிவமைப்பது என்று கோபமாக கேட்டனர்.

    இன்னும் மோசமான பதில்

    இன்னும் மோசமான பதில்

    இதற்கு மத்திய அரசு இன்னும் மோசமான பதிலை அளித்துள்ளது. அதன்படி பிரான்ஸ் அரசு இதில் எல்ஓசி (Letter of Comfort) கொடுத்துள்ளது. இதில் பிரான்ஸ் அரசு ஒப்பந்த முறைகளை பின்பற்றும் என்று கூறியுள்ளது என்று சமாளிக்க பார்த்தார். அதற்கு நீதிபதிகள், ஒப்பந்த படிவத்திலேயே விமானத்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று வரி இல்லாத போது, விமானம் எப்படி இந்தியாவிற்கு கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

    English summary
    Rafale Deal: There is no Sovereign Guarantee for Jet, Government admits in Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X