டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரபேல் விமானம் மட்டும் இருந்திருந்தால் கதையே வேறு.. காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ரபேல் விமானம் மட்டும் நமது கையில் இருந்திருந்தால் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் விமானம் மட்டும் இருந்திருந்தால்... பிரதமர் மோடி குற்றச்சாட்டு

    டெல்லி: ரபேல் விமானம் மட்டும் நமது கையில் இருந்திருந்தால் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

    சர்வதேச கட்டுமான தொழில்நுட்ப இந்தியா 2019 என்று மாநாட்டில் டெல்லியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் அவர் அரசியல் சார்ந்த விஷயங்கள் நிறைய பேசினார்.

    அதேபோல் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்தும், விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். இதில் காங்கிரஸ் மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

     <strong>காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு.. 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.. 2 காஷ்மீர் போலீசாரும் பலி!</strong> காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு.. 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.. 2 காஷ்மீர் போலீசாரும் பலி!

    அபிநந்தன் பெயர்

    அபிநந்தன் பெயர்

    மோடி தனது பேச்சில், அபிநந்தன் என்ற பெயரில் பொருள் இனி மாற போகிறது. அபிநந்தன் என்பதற்கு வரவேற்பு என்று பொருள். இனி அந்த பொருள் இருக்காது. அது மட்டும் கிடையாது இந்தியாவில் பல விஷயங்களின் பெயர்களும், அர்த்தங்களும் மாற போகிறது இனி.

    வெளியுறவு கொள்கை

    வெளியுறவு கொள்கை

    நல்ல வெளியுறவு கொள்கை காரணமாக அபிநந்தன் மீட்கப்பட்டார். முந்தைய அரசு நிறைய ஊழல்களை செய்தது. பாதுகாப்புத்துறை ஊழல்கள் பலவற்றை காங்கிரஸ் அரசு செய்தது. ஆனால் நாம் வெளிநாட்டு உறவு மூலம் நமது பாதுகாப்பு துறையின் பலத்தை உலகிற்கு எடுத்துரைத்து இருக்கிறோம்.

    காங்கிரஸ் ராணுவ ஒப்பந்தம்,

    காங்கிரஸ் ராணுவ ஒப்பந்தம்,

    ராணுவ ஒப்பந்தம், விமானம் வாங்குவது, ஹெலிகாப்டர் வாங்குவது என்று பல விஷயங்களில் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்தது. ஆனால் இப்போது அந்த இந்தியா கிடையாது. நமது இந்தியா மாறிவிட்டது. நம்முடைய பல கூடிவிட்டது. உலகம் நாம் செய்யும் செயல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    ரபேல் ஒப்பந்தம்

    ரபேல் ஒப்பந்தம்

    முந்தைய ஆட்சியில் ரபேல் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. ஆனால் நாங்கள் ரபேல் ஒப்பந்தம் செய்தோம். ஒருவேளை ரபேல் ஒப்பந்தம் மட்டும் முழுதாக முடிந்து விமானம் நமது கைக்கு வந்திருந்தால், இந்த தாக்குதலின் முடிவு இன்னும் வேறு மாதிரி இருந்திருக்கும், என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Rafale jets could have delivered better results: PM Modi accuses Congress for failed operations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X