பாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்!
ரபேல் மறுசீராய்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு பாஜக கட்சியை பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
டெல்லி: ரபேல் மறுசீராய்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு பாஜக கட்சியை பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. காங்கிரஸ் வைத்து இருந்த கடைசி ஆயுதமும் தற்போது தோல்வியை தழுவி உள்ளது.
ரபேல் வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை இல்லை, யார் மீதும் எப்ஐஆர் பதிய வேண்டியது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய பாஜக அரசு ஊழல் செய்து இருக்கிறது. பாஜக செய்த முறைகேடான ஒப்பந்தம் காரணமாக 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து.
இதற்காகதான் 5 மனுக்கள் ரபேல் வழக்கில் தொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு தொடுத்தனர்.

இப்போது தீர்ப்பு
இந்த வழக்கு ஒருமாதத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டது. ஆனால் ரபேல் வழக்கில் ஊழல் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்த வருடமே தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 4 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான தீர்ப்பு தற்போது வந்துள்ளது.

மீண்டும் என்ன?
இந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது. இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை, இதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

காங்கிரஸ் தோல்வி
இதன் மூலம் காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு எதிராக வைத்திருந்த கடைசி ஆயுதமும் தோல்வியை தழுவி உள்ளது. இந்த வழக்கை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரம் செய்யதது. ஆனால் அந்த பிரச்சாரம் எல்லாம் மொத்தமாக கலைந்து போய் உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தை மலைபோல் நம்பி இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளார்.

மோசம்
காங்கிரஸ் வைத்திருந்த மிகப்பெரிய பிரம்மாஸ்திரம் ஒன்றுமில்லாமல் போய் உள்ளது. பாஜக வரிசையாக அனைத்திலும் வெற்றிபெற்று வருவதால் ரபேலை வைத்து அவர்களை லாக் செய்ய காங்கிரஸ் நினைத்தது. ஆனால் அது நிறைவேறவில்லை.

கண்டனம் இல்லை
இந்த வழக்கில் மத்திய அரசு ரிலையன்ஸ் உடன் செய்யப்பட்ட ஒப்பந்தம், குறைவாக வாங்கப்பட்ட விமானங்கள் என்று எதற்கும் உச்ச நீதிமன்றம் கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. இதனால் இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு செய்த அனைத்து நடைமுறைகளும் எந்த விதத்திலும் தவறானது கிடையாது என்று நிரூபணம் ஆகியுள்ளது.

பெரிய நிம்மதி
இது மத்திய அரசுக்கு பெரிய அசுவாசத்தை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக பாஜக பெரிய நிம்மதி அடைந்துள்ளது. பிரதமர் மோடிக்கும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் தலைக்கு மேல் தொங்கி கொண்டு இருந்த கத்தி தற்போது காணாமல் போய் உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications