அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி! டிரம்ப்பை சார்ந்திருக்கக் கூடாது! ரகுராம் ராஜன்
டெல்லி: வர்த்தகம் இப்போது ஆயுதமாக்கப்பட்டுள்ளது, அமெரிக்க விதிக்கும் வரிகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்திருப்பது குறித்து அவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வர்த்தகம், நிதி, முதலீடு உள்ளிட்டவை இப்போது ஆயுதமாக்கப்பட்டுள்ளது. இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த அதிக வரிகள் மிகவும் வருத்தமளிக்கிறது.

எந்தவொரு வர்த்தக கூட்டாளியையும் சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டும் என்பதையே அமெரிக்க அதிபரின் செயல்பாடுகள் தெளிவாக காட்டுகிறது. ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இறக்குமதி கொள்கை
இந்த இறக்குமதி கொள்கையால் யார் பயனடைகிறார்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று கேட்க வேண்டும். சுத்திகரிப்பு நிறுவனங்கள்தான் அதிக லாபத்தை பெறுகிறார்கள். ஆனால் ஏற்றுமதியாளர்கள் வரிகளால் அதிக பணத்தை செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. எனவே நன்மை இல்லாத போது இந்த கொள்முதலைத் தொடர வேண்டுமா என்பதையும் பரிசீலனை செய்வது நல்லது.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்பின் அதிக வரிவிதிப்பானது இந்தியா- அமெரிக்கா உறவுகளுக்கு மிகப் பெரிய அடியாகும். இந்த நடவடிக்கை குறிப்பாக விவசாயிகள், ஜவுளி உற்பத்தியாளர்கள் போன்ற சிறிய ஏற்றுமதியாளர்களை பாதிக்கும். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இந்த வரி விதிப்பால் அமெரிக்காவில் உள்ள நுகர்வோர்களுக்கு தீங்குதான். அவர்கள் இப்போது 50 சதவீத விலையில் பொருட்களை வாங்குவார்கள்.
வர்த்தகம், முதலீடு
வர்த்தகம், முதலீடு, நிதி உள்ளிட்டவை ஆயுதமாக்கப்பட்டுள்ளன. நாம் நமது ஏற்றுமதி சந்தையை பலவகைப்படுத்த வேண்டும். சீனா, ஜப்பான், அமெரிக்கா அல்லது எந்த நாடுகளுடனாவது பணியாற்றலாம். ஆனால் அவர்களை சார்ந்திருக்கக் கூடாது. நமக்கான மாற்று வழிகளை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். சுய சார்பை எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்.
தொழிலை எளிதாக்க
இந்த போட்டி மிகுந்த உலகில் தொழிலை எளிதாக்கவும் அவற்றை மேம்படுத்தவும், கட்டமைப்பு சீர்திருத்தங்களை நாம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
இறக்குமதி வரி
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாடு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிதான் இறக்குமதி வரியாகும். அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்படி இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
5 கட்ட பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதித்தார். பின்னர் வரி விதிப்பை நிறுத்தி வைத்து அமெரிக்கா பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த வகையில் இந்தியாவுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்த போதிலும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
50 சதவீத வரி
இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு அபராதமாக கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். உக்ரைனுடன் போர் செய்யும் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என டிரம்ப் குற்றம்சாட்டி 50 சதவீத வரியை விதித்தார்.
டிரம்ப் அறிவிப்பு
இதனிடையே உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புதின்- டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தியா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவை கடந்த 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்தார்.
கண்டனக் குரல்
ரஷ்யாவிடமிருந்து இந்தியாவை விட மற்ற நாடுகள் எல்லாம் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கும் நிலையில் இந்தியாவுக்கு மட்டும் ஏன் டிரம்ப், 50 சதவீத வரி விதித்தார் என கண்டனங்கள் எழுந்துள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications